செந்தில் பாலாஜிக்கு 3 நாட்கள் மட்டும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது ஏன்.? அமலாக்கத்துறை கூறிய முக்கிய தகவல்

Published : Aug 25, 2023, 12:48 PM IST
செந்தில் பாலாஜிக்கு 3 நாட்கள் மட்டும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது ஏன்.? அமலாக்கத்துறை கூறிய முக்கிய தகவல்

சுருக்கம்

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றோடு முடிவடைந்த நிலையில், நீதிமன்ற காவலை 3 நாட்களுக்கு நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். வருகிற 28 ஆம் தேதி செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளார். 

அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்க்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு  அமைச்சர் செந்தில்பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் அவரது நீதிமன்ற காவல் இன்றோடு நிறைவடைந்ததை தொடர்ந்து எம்பி, எம்எல்ஏ நீதிமன்றத்தில் காணொளி காட்சி மூலாம் ஆஜர் செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வருகிற 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டித்து அதாவது 3 நாட்கள் மட்டும் காவல் நீட்டிக்கப்பட்டது அன்றைய தினம் நேரில் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.  இந்தநிலையில் கைது செய்யப்பட்டவர் ரிமாண்ட் செய்யப்படும் போது 14 நாட்கள் ரிமாண்ட் செய்யப்படுவார். ஆனால் செந்தில் பாலாஜியை 3 நாட்கள் மட்டும் நீதிமன்ற காவல் கொடுத்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.  

3 நாட்கள் மட்டும் நீதிமன்ற காவல்

இதற்கு பதில்  அளித்த அமலாக்கத்துறை வழக்கறிஞர், அமலாக்கத்துறை காவல் முடித்து, 12ம் தேதி திரு. செந்தில் பாலாஜி அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டபோது, அவருடைய நீதிமன்ற காவல் 14 நாட்களுக்கு, அதாவது 25.8.2023 வரை நீட்டிக்கப்பட்டது. அதன் பிறகு தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை/ புகார், கோப்பிற்கு எடுக்கப்பட்டு, வழக்கு எண்ணிடப்பட்டு, வாய்தா தேதி 28.8.2023 என நிர்ணயிக்கப்பட்டது. வழக்கின் வாய்தா தேதி 28.8.2023 என்பதால், தற்போது, நீதிமன்ற காவல் 3 நாள் மட்டும் நீட்டிக்கப்பட்டதாக தெரிவித்தார். 

ஜாமின் மனு தாக்கல் செய்யாத செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி வழக்கில் வருகிற 28 ஆம் தேதியன்று விசாரணை தொடங்குமா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், 28.8.2023 அன்று வழக்கின் நகல்கள், குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு வழங்கப்படும். விசாரணை தொடங்குவதற்கு முன் இன்னும் நடைமுறைகள் உள்ளதாக தெரிவித்தார்.  அதன் பின்னரும்  காவல் நீட்டிப்பு வழங்குவாரா நீதிபதி? என்ற கேள்விக்கு கைது செய்யப்பட்டவர் பிணையில் விடப்படும் வரை, குற்றம்சாட்டப்பட்டவரின் நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்படும் என தெரிவித்தார். மேலும் செந்தில் பாலாஜி ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளாரா என்ற கேள்விக்கு இதுவரை ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்யவில்லையென கூறினார். 

இதையும் படியுங்கள்

புழல் சிறையில் இருந்து நீதிபதி முன் ஆஜரான செந்தில் பாலாஜி.! 3 நாட்களுக்கு காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவு

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தேர்தல் நேரத்தில் மடிக்கணினி..? முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கேள்விகளை அடுக்கிய நயினார்..!
பிஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை..! ONGC சொத்துகள் சேதம்.. விவசாய சங்க தலைவருக்கு நீதிமன்றம் அதிரடி