
செந்தில் பாலாஜி கைது
அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை கடந்த ஜூன் மாதம் கைது செய்தது. அப்போது அவருக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து இருதய அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தியதையடுத்து அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த செந்தில் பாலாஜி கடந்த மாதம் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து அமலாகத்துறை செந்தில் பாலாஜியை 5 நாட்கள் கஷ்டடி எடுத்து விசாரணை நடத்தியது.
நீதிமன்ற காவல் நீட்டிப்பு
அப்போது வங்கி கணக்கில் பண பறிமாற்றம் தொடர்பாக விசாரணை செய்யப்பட்டது. அமலாக்த்துறை விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஒத்துழைப்பு வழங்கவில்லையென்றும், தங்களது கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கவில்லையெனவும் அமலாக்த்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்தநிலையில் செந்தில் பாலாஜி வழக்கானது. எழும்பூர் நீதிமன்றத்தில் இருந்து, எம்பி,எம்எல்ஏக்களை விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றோடு முடிவடைவதையடுத்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அதனை தொடர்ந்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை மேலும் 3 நாட்கள் நீட்டித்து, வரும் 28ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படியுங்கள்