தேர்தலுக்கு முந்தைய நாள்.. தமிழகத்தில் அதிரடியாக களமிறங்கிய ED- சென்னையை சுற்றி வளைத்து சோதனையால் பரபரப்பு

By Ajmal Khan  |  First Published Apr 18, 2024, 10:59 AM IST

நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் நாளை நடைபெறவுள்ள நிலையில், சென்னையில் 5 இடங்களில் அமலாக்க்துறை திடீர் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மீண்டும் அமலாக்கத்துறை சோதனை

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே  அமலாக்கத்துறை, வருமான வரித்துறை முற்றுகையிட்டு அவ்வப்போது சோதனை நடத்தி வருகிறது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் பொன்முடி என அடுத்தடுத்து குறிவைத்தது. இதனையடுத்து மணல் குவாரிகள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், பொதுப்பணித்துறை அலுவலங்களிலும் சோதனை தொடர்ந்தது. கடந்த வாரம் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இயக்குனர் அமீர் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.

Tap to resize

Latest Videos

இந்தநிலையில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் மீண்டும் அமலாக்கத்துறை தனது சோதனையை சென்னையில் தொடங்கியுள்ளது. 

5 இடங்களில் சோதனை

சட்ட விரோத பணப்பறிமாற்றம் தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் புஷ்பா நகரில் உள்ள முபாரக் உசைன் என்பவர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. இவர் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். மேலும் நுங்கம்பாக்கத்தில் மற்றொரு பகுதியில் தர்ஷன் குமார் என்பவர் ஐடி நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார்.  இவருடைய வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இதே போல  குமரன் நகர் பகுதியிலும் BBIG ஆடிட்டர் நிறுவனத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சோதனையின் போது பாதுகாப்பு பணிக்காக மத்திய பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். 

விழுப்புரம் அதிமுக வேட்பாளரை மாற்றுங்கள்..?? சி.வி.சண்முகம் பெயரில் வெளியான ஷாக் கடிதம்- போலீசில் புகார்

click me!