விழுப்புரம் அதிமுக வேட்பாளருக்கு எதிராக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பெயரில் சமூகவலைதளங்களில் வெளியான கடிதம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பொய்யான தகவல் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கோரியும், வாக்கு பதிவு நடைபெற உள்ளதால் திட்டமிட்டு பரப்புவதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
இறுதி கட்ட தேர்தல் பணி
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நேற்று மாலையோடு பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், நாளை காலை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் 6கோடியே 21 லட்சம் பேர் வாக்களிக்கவுள்ளனர். தமிழகத்தில் 68 ஆயிரம் வாக்குசாவடி உள்ள நிலையில் 44800வாக்கு சாவடிகளில் வெப் கேமரா மூலமாக முழுவதும் கண்காணிக்கப்படவுள்ளது. இந்தநிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் முதல் வேட்பாளர்கள் வரை பிரச்சாரத்தை முடித்துள்ள நிலையில்,
undefined
தற்போது சமூகவலைதளத்தில் பொய்யான தகவல்களை ஒரு சிலர் பரப்பி வருகின்றனர். மேலும் பழைய வீடியோக்களை எடிட் செய்தும் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக சார்பாக விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பாக்கியராஜ் மீது முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அதிருப்தியில் இருப்பதாக பரப்பப்பட்டு வருகிறது.
சிவி சண்முகம் பெயரில் போலியான கடிதம்
இது தொடர்பான சி.வி.சண்முகம் பெயரில் கடிதம் ஒன்றும் சமூகவலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது. அதில்,விழுப்புரம் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாக்யராஜ் நிறுத்தபட்டத்தில் தனக்கு விருப்பம் இல்லாத போல் எடப்பாடி பழனிசாமிக்கு மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் கடிதம் எழுதியதை போல் சமூக வலை தளத்தில் ஒரு கடிதம் பகிரப்பட்டு வருகிறது. இதன் காரணமாக விழுப்புரம் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்த நிலையில்,
இது போலியான கடிதம் என்றும் வாக்காளர்களை திசை திருப்ப மேற்கொள்ளப்பட்டதாக கூறி அதிமுக வழக்கறிஞர் தமிழரசன், ராதிகா செந்தில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் சிவி சண்முகம் அளித்தது போன்று பொய்யான அறிக்கை தயார் செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.