நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப் இல்லாதவர்கள் அரசால் அங்கீகரிப்பட்ட அடையாள அட்டையை காண்பித்து வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எந்த எந்த அடையாள அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்ற தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு பணி தீவிரம்
நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் நாளை நடைபெறவுள்ளது. இதனையடுத்து வாக்குப்பதிவிற்கான இறுதிகட்ட பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில், வாக்குப்பதிவிற்காக இவிஎம் இயந்திரங்கள், மை உள்ளிட்ட வாக்கு பதிவின் போது தேவைப்படும் ஆவணங்களை இன்று மாலை வாக்குச்சாவடிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்போடு கொண்டு செல்லப்படுகிறது. தமிழகத்தில் 68 ஆயிரம் வாக்குசாவடி உள்ள நிலையில் 44800வாக்கு சாவடிகளில் வெப் கேமரா மூலமாக முழுவதும் கண்காணிக்கப்படவுள்ளது. மேலும் முதியவர்கள் ,மாற்றுதிறனாளிகள் வசதிகளுக்காக ரேம்ப் மற்றும் சக்கர நாற்காலி ஆகியவை தயார் நிலையிலும் வைக்கப்பட்டுள்ளது.
|| ஹலோ... வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? கவலையை விடுங்கள்... | | | | | pic.twitter.com/ZZA5RMnqsI
— Asianetnews Tamil (@AsianetNewsTM)
அடையாள அட்டை .?
இந்தநிலையில், பூத் சிலிப் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்களிக்க முடியுமா.அல்லது வேறு எந்த ஆவணங்களை வாக்குச்சாவடிக்கு அடையாள அட்டையாக கொண்டு செல்லலாம் என்ற தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வாக்காளர்கள் தங்களது பெயர் உள்ள வாக்குச்சாவடி தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்தால் எந்த இடத்தில் பூத் அமைக்கப்பட்டுள்ளது என்ற தகவல் தெரியவரும். மேலும் பூத் சிலிப் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட 1,ஆதார் அட்டை, 2,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டப்படியான வேலைக்கான அடையாள அட்டை, 3.வங்கி புத்தகம், 4.தபால் அலுவலகம் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய கணக்குப் புத்தகங்கள், 5.தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை,
மாற்று ஆவணங்கள் என்ன.?
6. ஓட்டுநர் உரிமம்,7. பான் அட்டை, 8.தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் வழங்கிய ஸ்மார்ட் அட்டை,9. இந்திய கடவுச்சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்,10. மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, மக்களவை உறுப்பினர்கள், 11. சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான அதிகாரபூர்வ அடையாள அட்டைகள்,12. மற்றும் சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட தனித்துவமான அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறுகையில், ஒவ்வொருவரும் தவறாமல் அவர்களுடைய வாக்கு உரிமை செலுத்த வேண்டும் என தெரிவித்தார். 90% பூத் சிலிப் கொடுத்தாகிவிட்டது என்றும் பூத் சிலிப் இல்லையென்றாலும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள அடையாள அட்டையை வைத்து வாக்களிக்கலாம் என கூறினார்.
இதையும் படியுங்கள்
நாளை ஓட்டு போட போறீங்களா..? பேருந்தில் இலவசமாகவே பயணிக்கலாம்.! யார்.? யாருக்கு சலுகை தெரியுமா.?