நாளை ஓட்டு போட போறீங்களா..? பேருந்தில் இலவசமாகவே பயணிக்கலாம்.! யார்.? யாருக்கு சலுகை தெரியுமா.?

By Ajmal KhanFirst Published Apr 18, 2024, 8:13 AM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் பார்வை குறைபாடு மற்றும் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் வாக்களிக்குச் செல்ல நகரப் பேருந்துகளில் கட்டணம் இன்றி  பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

நாளை வாக்குப்பதிவு

இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வியோடு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் முதல்கட்டமாக நாளை தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறுகிறது. இந்தநிலையில், இதில் வாக்களிக்க 6கோடியே 21 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்காக 60ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஜனநாயக கடமையாற்ற வெளியூரில் பயணம் செய்யும் நபர்கள் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு உள்ளனர். நேற்று இரவு சென்னை கோயம்பேடு மற்றும் கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்துள்ளனர்.

பாஜகவுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது? 100 காரணங்கள்.. லிஸ்ட் போட்ட அமைச்சர் மனோ தங்கராஜ்.!

பேருந்தில் இலவச பயணம்

இந்தநிலையில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி, நாளை நடைபெறும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் பார்வை குறைபாடு மற்றும் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் வாக்களிக்குச் செல்ல நகரப் பேருந்துகளில் கட்டணம் இன்றி  பயணம் செய்யலாம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்,  கோவை, ஈரோடு, ஊட்டி,திருப்பூர் மண்டலங்களில் இலவச பேருந்து பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

யார்.? யாருக்கு இலவச பயணம்.?

பேருந்தில் பயணிக்கும் வாக்காளர்கள் ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து கட்டணம் இன்றி பயணச்சீட்டு இன்றி பயணம் மேற்கொள்ளலாம். 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் பார்வை குறைபாடு மற்றும் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் சாதாரண கட்டணம் நகரப் பேருந்துகளில் எவ்வித பயணச்சீட்டும் வழங்காமல் கட்டணம் இன்றி காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்களிக்க அழைத்துச் செல்லலாம் என மண்டல துணை மேலாளர்கள் மற்றும் கிளை மேலாளர்களுக்கு மேலாண் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். 

இதையும் படியுங்கள்

இபிஎஸ் உங்களுக்கு 24 மணிநேரம் தான் டைம்! அதுக்குள்ள மன்னிப்பு கேட்கலனா? இதுதான் நடக்கும்! தயாநிதி வார்னிங்!

click me!