பாஜகவுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது? 100 காரணங்கள்.. லிஸ்ட் போட்ட அமைச்சர் மனோ தங்கராஜ்.!

By vinoth kumar  |  First Published Apr 18, 2024, 6:47 AM IST

நாடாளுமன்ற தேர்தல் நாளை முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதற்கட்ட தேர்தல் நாடு முழுவதும் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 


பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவை மக்கள் நிராகரிப்பதற்கு 100 காரணங்களை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பட்டியலிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நாளை முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதற்கட்ட தேர்தல் நாடு முழுவதும் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. குறிப்பாக தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் ஒரேயொரு தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Tap to resize

Latest Videos

நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில் பரப்புரையின் போது அதிமுகவை விட பாஜகவை திமுக கடுமையாக விமர்ச்சித்து வந்தது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவை மக்கள் நிராகரிப்பதற்கு 100 காரணங்கள் உள்ளது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பட்டியலிட்டுள்ளார். 

மோடி தலைமையிலான பாஜகவை மக்கள் நிராகரிக்க 100 காரணங்கள்

1. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு

2. அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு

3. 8250 கோடி தேர்தல் பத்திர ஊழல்

4. ரஃபேல் விமானங்கள் வாங்கியதில் ஊழல்

5. 23 பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரைவார்ப்பு

6. கார்ப்பரேட்டுகளின் கடன் 25 லட்சம் கோடி தள்ளுபடி

7. GST வரி

8. கருப்புப் பணம் ஒழிப்பு நாடகம்

9. சிறுகுறு தொழில்கள் முடக்கம்

10. IT, ED, CBI போன்ற தன்னாட்சி அமைப்புகளை எதிர்க்கட்சிகள் மீது ஏவி விட்டது

11. CAG- 7.5 லட்சம் கோடி ஊழல்

12. ஊழல் எதிர்ப்பு அமைப்பான லோக்பால் செயலிழப்பு

13. PM-Cares ஊழல்

14. விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவதில் தோல்வி

15. இந்தியாவின் கடன் 2014-ல் 55 லட்சம் கோடி ஆனால் பாஜக ஆட்சியில் 204 லட்சம் கோடி

16. டெல்லியில் போராடிய விவசாயிகள் மீது ட்ரோன் மூலம் தாக்குதல்

17. சாமானிய மக்களின் வங்கி கணக்கில் இருந்து 35,000 கோடி அபேஸ்

18. CAA

19. பொய் செய்திகள் பரப்புவதில் இந்தியா முதலிடம்

20. மோடி அரசு விளம்பரங்களுக்காக 3000 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது

21. சண்டிகர் மாநகர மேயர் தேர்தலில் பாஜகவின் முறைகேடு

22. அக்னிபாத் திட்டம்

23. புல்வாமா தாக்குதல்-40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது

24. இந்திய பாராளுமன்ற கட்டிடத்தில் வண்ண புகை குண்டுகளை கொண்டு தாக்குதல்

25. எதிர்க்கட்சிகளின் வங்கி கணக்கு முடக்கம்

26. ஊடகங்களின் மீதான அடக்குமுறை

27. வேலையில்லா திண்டாட்டம்

28. பணவீக்கம்

29. தனிநபர் வருமானம் குறைப்பு

30. 5-டிரில்லியன் டாலர் இலக்கு தோல்வி

31. பட்டினி குறியீட்டில் 111-வது இடம்

32. சாதிவாரி கணக்கெடுப்பு

33. இந்திய எல்லையான லடாக்,அருணாச்சல பிரதேசத்தை சீனாவிற்கு தாரைவார்த்தது

34. இந்தி/சமஸ்கிருத மொழிகளுக்கே முன்னுரிமை

35. சுங்கச்சாவடிகளில் வசூல் வேட்டை

36. எட்டு வயது சிறுமி ஆசிபா கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டது

37. பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது

38. உத்திரபிரதேசத்தில் பட்டியலின சிறுமி பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது

39. பாஜக எம்.பி.பிரிட்ஜ் பூஷன் சிங், இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்

40. மணிப்பூரில் பெண்கள் வீதிகளில் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டது

41. உத்திரபிரதேசம் ஹத்ராஸ் பகுதியில் பட்டியலின பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது

42. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 33% ஆக குறைப்பு

43. பாஜக ஆட்சியில் பட்டியலின / பழங்குடியின மக்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமைகள் 40% சதவீதம் உயர்வு

44. பாஜக ஐ.டி.விங் நிர்வாகிகள் 3 பேர் 20 வயது கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தது

45. கல்வி சுதந்திர குறியீட்டில் பின்னடைவு

46. புதிய கல்விக் கொள்கை

47. சிறுபான்மை மாணவர்களுக்கான ஆதரவு ஊதியத்தை ரத்து செய்தது

48. 141 நாடாளுமன்ற எம்பிக்கள் பணியிடை நீக்கம்

49. தமிழ்நாட்டிற்கான நிதி பங்கிட்டில் பாகுபாடு

50. மாநில சுயாட்சியில் ஓன்றிய அரசின் தலையீடு. 

51. பழங்குடியின பெண் குடியரசு தலைவரை புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா மற்றும் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அழைக்காதது

52. நாடாளுமன்ற நிலை குழுக்களுக்கு அனுப்பப்படும் மசோதாக்கள் விகிதம் 71% இருந்து 21% ஆக குறைப்பு

53. பெண்களுக்கான 33% சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாதது

54. தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின்படி பாஜக ஆட்சியில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை

55. கடந்த 10 ஆண்டுகளில் ஒரு முறை கூட மோடி பத்திரிகையாளர் சந்திப்பை எதிர்கொள்ளவில்லை

56. மதத்தின் அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தும் பாஜக

57. நாட்டின் வளங்களை கார்ப்பரேட்டுகள் சுரண்ட பாரத் மாலா, சாகர் மாலா, உதான் திட்டங்கள்

58. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் முறைகேடு

59. 5-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதில் ஊழல்

60. ஸ்பெக்ட்ரம் ஊழல்

61. ஸ்கில் இந்தியா மோசடி

62. 9,000 கோடி மோசடி செய்த விஜய் மல்லையா மற்றும் 22,000 கோடி மோசடி செய்த நீரவ் மோடியை வெளிநாடுகளுக்கு தப்ப வைத்தது

63. தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தில் ஊழல்

64. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரிவு

65. ONGC ஊழல்

66. டெண்டர் முறைகேடு

67. கேமன் தீவு FDI ஊழல்

68. அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா நிறுவன ஊழல்

69. வியாபம் ஊழல்

70. DMAT ஊழல்

71. போலி நாணய மோசடியில் பாஜகவினர்

72. ஜார்க்கண்ட் நிலக்கரி ஊழல்

73. குஜராத்தில் அதானிக்காக நில மோசடி

74. அம்பானி, அதானி சொத்து மதிப்பு பாஜக ஆட்சியில் 80% உயர்ந்துள்ளது

75. டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு ரூ.83.2 ஆக வீழ்ச்சி

76. மோடி அரசு ஊழல் மூலம் தனது கட்சியின் சொத்துக்களையும், ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகளின் சொத்துக்களையும் பன்மடங்கு பெருக்கி உள்ளது

77. 2000 ரூபாய் நோட்டை அறிமுகம் செய்து பிறகு செல்லாது என அறிவித்தது

78. பத்திரிக்கை சுதந்திரக் குறியீட்டில் 161 வது இடம்

79. உலக ஊழல் குறியீட்டில் 93-வது இடம்

80. கடந்த 10 ஆண்டுகளில் மாணவர்களின் தற்கொலை ஒரு லட்சத்திற்கும் மேல்

81. இந்தியாவில் படித்த இளைஞர்கள் 83% பேர் வேலைவாய்ப்பின்றி உள்ளனர்

82. வெளிநாட்டு முதலீடு உடைய நிறுவனங்கள் பாஜகவிற்கு நன்கொடை

83. சமீபத்தில் ஜம்மு & காஷ்மீரில் மோடி ஆட்டிறைச்சி சாப்பிடும் மக்களை இழிவு படுத்தி இருக்கிறார்

84. தேர்தல் பிரச்சாரங்களில் பிரதமர் மோடியின் பேச்சு முழுக்க முழுக்க மதத்தையும், சாதியையும் சார்ந்தே உள்ளது

85. மோடி சொன்ன அனைவரின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் வராதது

86. 2019-2023 வரை 35,680 MSME தொழில்கள் மூடப்பட்டுள்ளன

87. பல ஆயிரம் கோடி ஊழல் செய்த 25 அரசியல்வாதிகள் பாஜகவில் இணைந்து தப்பித்துள்ளனர்

88. இந்திய குடும்பங்களின் கடன் அளவு உயர்வு

89. ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி

90. கடந்த 10 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை அடக்குமுறை அதிகரிப்பு

91. இன்டர்நெட் இணைப்பை முடக்குவதில் இந்தியா முதலிடம்

92. ரயில்வே வெயிட்டிங் லிஸ்ட் மூலம் 1230 கோடி வசூல்

93. மக்கள் மத்தியில் நிலவும் ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு

94. EVM தயாரிப்பில் பாஜகவினர்

95. இந்தியாவில் 19.3% குழந்தைகள் 24 மணிநேர இடைவெளியில் பட்டினியால் தவிக்கின்றனர்

96. எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அரசியல் செய்வது

97. மணிப்பூரில் கார்கில் போருக்காக உயிர்த்தியாகம் செய்ய முன்வந்த ராணுவ வீரரின் மனைவி பொதுவெளியில் நிர்வாணமாக்கப்பட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது

98. இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளில் 75% பாஜக ஆளும் மாநிலங்களில் நடக்கிறது

99. தேர்தல் பத்திர நன்கொடைக்காக கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது

100. மோடி ஆட்சியில் வாராக்கடன் 55.5 லட்சம் கோடி

click me!