நவரச நாயகன் நடிகர் கார்த்திக் கோவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரனுக்கு ஆதரவாக இன்று பாடல் பாடி பிரசாரம் மேற்கொண்டார்.
கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து நடிகர் நவரச நாயகன் கார்த்திக் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், இந்தப் பக்கம் அந்த பக்கம் தாவாமல் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரே பக்கத்தில் இருக்கிறேன். சிறந்தவர்கள் யார் என்று அறிவுபூர்வமாக தேர்ந்தெடுத்துள்ளனர்.
undefined
சிங்கை இராமச்சந்திரனை புதிதாக வந்தவர்கள் என்னென்னமோ பேசி வருகிறார்கள். அண்ணாமலை போன்றவர்களை ஐபிஎஸ் பணியை எதற்காக விட்டு வந்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் உயர் தொழிலை விட்டுவிட்டு மக்கள் பணியாற்ற சிங்கை ராமச்சந்திரன் வந்துள்ளார் என்று கூறி பிரசாரம் மேற்கொண்டார்.
உயிரே போனாலும் நீட் தேர்வு ரத்து கிடையாது; அண்ணாமலையின் பதிலால் கூட்டணியில் சலசலப்பு
பிரசாரத்தை முடிக்கும் போது அங்கிருந்த அதிமுக தொண்டர்கள் அமரன் படத்தில் வரும் பாடலை பாட வேண்டும் என நடிகர் கார்த்திக்கிடம் கோரிக்கை வைத்தனர். பின்னர் அமரன் படத்தில் வந்த பாட்டை பாடிய கார்த்திக் “வெத்தல போட்ட சோக்குல கப்புனு குத்துன மூக்குல வந்தது பாரு ரத்தம்” அந்த ரத்தம் யாருக்கு வந்தது என மக்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என மக்களிடம் சொன்னபோது அண்ணாமலைக்கு ரத்தம் என பொதுமக்கள் கூச்சலிட்டனர். பின்னர் சோடா பாட்டிலுக்கு பதிலாக இரட்டை இலைக்கு மை வைத்து வாக்களியுங்கள் எனகூறி பேச்சை முடித்தார்.