முதல்கட்ட நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு நேரம் குறைப்பா.? தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு

By Ajmal KhanFirst Published Mar 20, 2024, 8:44 AM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கப்படவுள்ள நிலையில், முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவிற்கான நேரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 

வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது

மிகப்பெரிய ஜனநாயக தேர்தல் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் 96.88 கோடி மக்கள் வாக்களிக்க தயாராக உள்ளனர். இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் 7 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.  அந்த வகையில் தமிழகம், புதுவை உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

Latest Videos

முதல்கட்ட வாக்குபதிவுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (மார்ச் 20-ம் தேதி) முதல்  பெறப்படுகின்றன. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்  மார்ச் 27-ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 28-ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது.  வேட்புமனு வாபஸ் பெற மார்ச் 30-ம் தேதி கடைசி நாள் ஆகும். இதனை தொடர்ந்து ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 

வாக்குப்பதிவு நேரம் என்ன.?

 இந்த நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள இடங்களில் வாக்குப்பதிவுக்கான நேரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடுட்டுள்ளது. அதன் படி,  ஏப்ரல் 19 தமிழ்நாடு புதுச்சேரியில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மணிப்பூர், மேகாலயா மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

வாக்குப்பதிவு நேரம் குறைப்பு

சத்தீஸ்கர், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஒரு சில தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு மாலை 3 மணியுடன் நிறைவடையும் என  தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நக்சலைட் நிறைந்த பகுதி, மலைப்பகுதிகளில் நேரமானது மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படியுங்கள்

மன்னிப்பு கேட்கிறேன்... குண்டு வெடிப்பு தொடர்பாக தமிழர்களை விமர்சித்த பாஜக மத்திய அமைச்சர் பல்டி

click me!