தமிழகம் உட்பட 102 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது- வேட்பாளர்களுக்கான கட்டுப்பாடுகள் என்ன.?

By Ajmal KhanFirst Published Mar 20, 2024, 7:37 AM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தலையொட்டி முதல் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தமிழகம் உட்பட 102 தொகுதிகளில் இன்று தொடங்குகிறது. ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 
 

தொடங்கியது தேர்தல் திருவிழா

நாடாளுமன்ற தேர்தல் திருவிழா தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணி கட்சிக்கு தொகுதி பங்கீடு செய்து முடித்துள்ளது. இன்று வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பிரசாரத்தை தொடங்கவுள்ளது. இதே போல அதிமுக மற்றும் பாஜகவும் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ளது.

Latest Videos

இந்தநிலையில்  நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெறவுள்ளது.  ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை தேர்தல் நடைபெறுகிறது. இதில்  தமிழ்நாட்டில் ஏப்ரல்19-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. தமிழகம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

 தேர்தல் தேதி எப்போது.?

இதனையடுத்து  முதல்கட்ட வாக்குபதிவுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (மார்ச் 20-ம் தேதி) முதல்  பெறப்படுகின்றன. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்  மார்ச் 27-ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 28-ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது.  வேட்புமனு வாபஸ் பெற மார்ச் 30-ம் தேதி கடைசி நாள் ஆகும். இதனை தொடர்ந்து ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.  2-ம் கட்டமாக நடைபெறும் தேர்தல்கள் ஏப்.26-ம் தேதி நடைபெறும் எனவும், 3-ம் கட்ட தேர்தல் மே 7-ம் தேதியும், 4-ம் கட்ட தேர்தல் மே-13-ம் தேதியும், 5-ம் கட்ட தேர்தல் மே 20-ம் தேதியும், 6-ம் கட்ட தேர்தல் மே-25-ம் தேதியும், 7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதியும் நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. 

கட்டுப்பாடுகள் என்ன.?

இந்தநிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய வருபவர்கள்  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் படி மூன்று கார்களுக்கு மட்டுமே ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதிக்கப்படும். மேலும் நிர்ணயிக்கப்பட்டுள்ள 100 மீட்டர் எல்லைக்குள் அனுமதிக்கப்படுவர். வேட்புமனு தாக்கல் செய்யும்போது வேட்பாளர்கள் 4 பேர் மட்டுமே உடனிருக்க வேண்டும். வேட்புமனு காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை தாக்கல் செய்யலாம். வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் அலுவலகத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இதில் ஊர்வலமாகவோ கூட்டமாக வந்து வேட்புமனு  தாக்கல் செய்யக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

அதிமுக கூட்டணியில் இன்று இறுதியாகிறது தொகுதி பங்கீடு.! எந்த கட்சிக்கு எத்தனை இடம் தெரியுமா.?

 

click me!