
சென்னை உயர்நீதிமன்றம் நாளை இரவு 8 மணி முதல் ஞாயிற்றுக் கிழமை இரவு 8 மணி வரை மூடப்படும் என பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
உயர்நீதிமன்றம் அரசு சொத்து என்பதை நினைவூட்டும் விதமாக ஆண்டுதோறும் கதவுகள் அடைக்கப்படுவது வழக்கம்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த பதிவாளர் தேவநாதன், பாரம்பரிய சம்பிரதாயத்திற்காக ஒரு நாள் முழுவதும் உயர்நீதிமன்ற அனைத்து வாயில்களும் மூடப்பட உள்ளதாக தெரிவித்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் அனைத்து கதவுகளும் நாளை இரவு 8 மணிக்கு மூடப்படுகிறது. நாளை இரவு 8 மணிமுதல் ஞாயிறு இரவு 8 மணி வரை கதவுகள் மூடப்பட்டிருக்கும் என பதிவாளர் குறிப்பிட்டார்.
கதவுகள் மூடப்பட்டிருக்கும் நேரத்தில் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் நீதிமன்றத்திற்குள் செல்ல அனுமதி இல்லை எனவும் ஐகோர்ட்டில் உள்ள பாதுகாப்பு படையினருக்கு இந்த கட்டுப்பாடுகள் பொருந்தாது எனவும் தெரிவித்தார்.