இந்த நாளில் விரதம் இருந்தால் ...எவ்வளவு பலன்கள் தெரியுமா ?

Asianet News Tamil  
Published : Nov 17, 2017, 05:48 PM ISTUpdated : Sep 19, 2018, 01:27 AM IST
இந்த நாளில் விரதம் இருந்தால் ...எவ்வளவு பலன்கள் தெரியுமா ?

சுருக்கம்

how to maintain the fasting ?

விரதம் 

விரதம் மேற்கொள்பவர்கள் எதனையெல்லாம்  கடைபிடிக்க வேண்டும்  என்பதை நம்  முன்னோர்கள்  நமக்கு  சொல்லி தந்திருப்பர். இருந்தாலும்  சிலர்  எதற்காக  விரதத்தை  கடை பிடிக்கிறோம்  என்பதை கூட தெரியாமல்  விரதம் இருப்பார்கள். அவ்வாறு விரம் இருக்கும் போது  என்னென்ன பலன்கள் இருக்கின்றன என்பதை  பார்க்கலாம் 

விரதங்களின் பலன்கள்

பொதுவாக விரதங்கள் நாம் இருப்பது அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்றே. ஆனால் எந்த விழாவின் போது விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பது யாரும் அறிந்ததில்லை. அதை பற்றி இங்கு பார்ப்போம்.

சங்கடஹர சதுர்த்தி : தேவையற்று ஏற்படும் சங்கடங்கள் அனைத்தும் தீர்ந்து மனதில் அமைதி நிலவும்.

விநாயக சதுர்த்தி : வாழ்வின் விக்னங்கள் அனைத்தும் தீர்ந்து விநாயகனின் பூரணமான அருள் கிட்டும்.

சரவண விரதம் : குடும்பத்தில் அனைவரிடமும் ஒற்றுமை பெருகி. ஆனந்தமும், சந்தோஷமும் கிட்டும்.

வைகுண்ட ஏகாதசி : குடும்பத்தில் நிலவி வந்த வறுமைகள் அனைத்தும் நீங்கி, செல்வ வளம் கொழித்திடும்.

சஷ்டி விரதம் : மனதில் எண்ணிய காரியங்கள் அனைத்தும் இனிதே நிறைவேறும். புண்ணியம் தரும்.

கௌரி விரதம் : குறையாத செல்வமும், நீண்ட ஆயுளும், நல் மனைவியும், குழந்தைகளும் கிடைக்கும்.

வரலெஷ்மி விரதம் : மாங்கல்ய பாக்கியம் கிடைத்திடும். திருமணமான தம்பதியரிடையே நல் ஒற்றுமை நிலவும்.

பிரதோஷ விரதம் : மன அமைதி கிடைத்திடும், நீண்ட நல் ஆயுள் அமைந்திடும். செல்வ வளம் பெருகிடும்.

மகா சிவராத்திரி : சிவ பெருமானின் அருள் கிடைக்கும், வாழ்வில் அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

வைகாசி விசாகம் : நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்கள் குழந்தைச் செல்வம் கிடைக்க பெறுவர்.

நவராத்திரி விரதம் : மனநலம், நீண்ட நல் ஆயுள், குறையாத செல்வம் அனைத்தும் கிடைக்கப் பெறுவர்.

கோகுலாஷ்டமி விரதம் : மனநலம், நீண்ட நல் ஆயுள், குறையாத செல்வம் அனைத்தும் கிடைக்கப் பெறுவர்.

மாவாசை விரதம் : பித்ருக்களுக்கு செய்யும் தர்ப்பணத்தால், அவர்களது ஆசிகள் அனைத்தும் கிடைக்கும்.

பௌர்ணமி விரதம் : வாழ்வில் ஏற்பட்ட அனைத்து கஷ்டங்களும் விலகி, சுகமான வாழ்வு அமையும்.

கார்த்திகை விரதம் : எல்லாவிதமான நன்மைகளும் வந்தடையும். முருகனின் பரிபூரண ஆசி கிடைக்கும்.

விரதத்தின் மகிமையினை புரிந்துகொண்டு விரதமிருந்தால் வளமும் நலமும் பெற முடியும்.

PREV
click me!

Recommended Stories

'என்னை வெறி ஏத்தி விட்றாத'.. மீண்டும் செய்தியாளரிடம் சீறிய சீமான்! என்ன நடந்தது?
அப்பாடா! தமிழகத்தில் 6 நாட்கள் கொட்டப்போகும் மழை.. எங்கெங்கு? வானிலை லேட்டஸ்ட் அப்டேட்!