
உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதாக சகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதாகவும், தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்களை களையெடுக்கும் பணி தொடர்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், தமிழகம் முழுவதும் இதுவரை 800 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் எம்.பி.பி.எஸ். படிக்காமல் மருத்துவம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் விஜயபாஸ்கர் குறிப்பிட்டார்.
தமிழகம் முழுவதுமுள்ள மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் கோவை அரசு மருத்தவமனைக்கு ஜெயிக்கா என்கிற திட்டத்தில் 280 கோடி நிதி வழங்கப்பட்டுஅதிநவீன கருவிகள் வாங்கப்பட்டுள்ளதாவும் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் ரூ.23 கோடியே 50 லட்சம் மதிப்பில் 837 செல் கவுண்டர்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் ரத்தத்தில் உள்ள வெள்ளை, சிவப்பு அணுக்களை குறைந்த நேரத்தில் கணக்கிட முடியும் எனவும் தெரிவித்தார்.