
வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து கொள்ளையடித்தும், அவர்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் ஈடுபட்ட அறிவழகன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
1980 ஆண்டுகளில் சென்னையை கலக்கிய பிரபல ரவுடி அகரம் நாராயணன். வீட்டில் தனியாக இருக்கும் பெண்களைக் குறி வைத்து கொள்ளையடித்தும், பெண்களை பலாத்காரம் செய்தும் வந்தார். அகரம் நாராயணன் என்ற பெயரைக் கேட்டாலே பெண்கள் பதறுவார்கள். வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் தண்ணீர் கேட்டு, பெண்கள் சமையலறைக்கு செல்லும்போது அவர்கள் பின்னாலே சென்று அவர்களை மிரட்டி தனது காமப்பசியை தீர்த்துக்
கொள்வார். பின்னர் அங்கிருக்கும் நகை, பணத்தை கொள்ளை அடித்துக் கொண்டு தப்பிவிடுவார்.
அகரம் நாராயணன் பாணியில் தற்போது ஒரு கொள்ளையன் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். நேற்று முன்தினம் சைதாப்பேட்டையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். வாகன சோதனையின்போது, அறிவழகன் என்பவரிடம் போலீசார் விசாரணை செய்ததில், அவன் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளான். மேலும் அறிவழகன் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளதை அடுத்து, இவரை விசாரணைக்காக அடையாறு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அறிவழகன் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டதாக தெரிகிறது. தான் கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் என்றும், பட்டதாரியான நான் பெங்களூரில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்ததாகவும் கூறிய அறிவழகன், வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார். சென்னை, விலில்லிவாக்கம், அம்பத்தூர், சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, மேற்கு மாம்பலம் ஆகிய பகுதிகளில் அறிவழகன் வீடு புகுந்து திருடியதாகவும், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறி அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
கிண்டி, அம்பாள் நகர் பகுதியில் வீட்டில் திருடியபோது, அங்கிருந்த பெண் கூச்சல் போட்டதாகவும், கத்திமுனையில் அவரை மிரட்டி கட்டிப்பிடித்து வாயைப் பொத்தியதாகவும், அப்போது எழுந்த காமப்பசிக்கு அவரை இரையாக்கியதாகவும் கூறினார். இதுபோல் வீடுகளில் திருடும்போது பெண்களை பலாத்காரம் செய்வதாகவும் போலீசில் கூறினார்.
அறிவழகன் சொன்னதை அடுத்து, 2 தனி போலீஸ் படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், பாலியல் பலாத்காரம் செய்வதாக இதுவரை எந்த புகாரும் போலீசுக்கு வரவில்லை என்றும், போலீசார் கூறியுள்ளனர். அறிவழகனால் ஓரிரு பெண்களாவது பாதித்திருக்கக்கூடும் என்பதால் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.