
மின்சார ரயில் விபத்து
சென்னையில் இருந்து திருவள்ளூர் சென்ற மின்சார ரயில் பேசின் பிரிட்ஜ் அருகே தடம் புரண்டது. இது காரணமாக பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து அந்த வழியில் ரயில் சேவையானது ரத்து செய்யப்பட்டது. தண்டவாளத்தை விட்டு தடம் புரண்ட ரயில் பெட்டியை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். இந்தநிலையில் ரயில் விபத்து தொடர்பாக சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் கணேஷ் செய்தியாளர்களிடம் கூறும் போது, இது ஒரு சின்ன விபத்து. 2 சக்கரங்கள் மட்டும் தடம் புரண்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த ரயில்வே போலீசார் ரயில்வே பணியாளர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு தற்போது சரி செய்தனர்.
விசாரணை நடத்த உத்தரவு
இது தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடத்தப்படும். இந்த பெட்டியில் 10 முதல் 12 பயணிகள் பயணம் செய்து இருப்பார்கள்.
பயணிகள் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. கூடிய விரைவில் இந்த வழியாக ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த விபத்து தொடர்பான காரணத்தை தற்போது தெரிவிக்க முடியாது. முழுமையான விசாரணைக்கு பிறகு விபத்துக்கான காரணம் தெரியவரும். இந்த விபத்து தொடர்பாக மூத்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளேன்.சில தினங்களுக்கு முன்பு பேசின் பிரிட்ஜ் பணிமனையில் தடம் புரண்ட ரயில் விபத்துக்கும் இந்த ரயில் விபத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
விடுமுறைக்கு பின் நாளை பள்ளிகள் திறப்பு..! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு