
இரவு முழுவதும் கொட்டி தீர்த்த மழை
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கோடை வெயிலுக்கு இணையாக வெப்பமானது அதிகரித்து காணப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கி கிடந்தனர். எப்போது மழை பெய்யும்? என மக்கள் காத்திருந்த நிலையில், கடந்த சில நாட்களாக காலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும் இரவு நேரத்தில் லேசான மழை பெய்து வந்தது. இந்தநிலையில் நேற்று இரவு 8 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இரவு முழுவதும் இடி மின்னலோடு நீடித்தது. இதனால் சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கியது. வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.
வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும்
இரவு முழுவதும் மழை பெய்தததால் இன்று காலை பள்ளிகள் விடுமுறை விடப்படுமா என மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் எதிர்பார்த்திருந்தனர். இந்தநிலையில் தற்போது சென்னையில் மழையானது நின்றுள்ளது. எனவே இன்று பள்ளிகளுக்கு விடுமுறை இல்லையென்றும் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதே போல திருவள்ளுர் மற்றும் காஞ்சிபுரத்திலும் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்