சென்னை, திருவள்ளூரில் இடி மின்னலோடு விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை...பொதுமக்கள் மகிழ்ச்சி

By Ajmal Khan  |  First Published Aug 14, 2023, 6:06 AM IST

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், நேற்று இரவு தொடங்கிய மழை அதிகாலை வரை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 


வெயிலால் மக்கள் பாதிப்பு

தமிழகத்தில் மார்ச் மாதம் இறுதியில் தொடங்கும் கோடை காலம் ஜூலை மத்தியில் நிறைவு பெறும். இந்த கால கட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும். எனவே ஜூலை மாதத்திற்கு பிறகு வெப்பமானது படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கோடை காலத்தை விட ஆகஸ்ட் மாதத்தில் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமம்  அடைந்தனர். வீடுகளில் இருந்து வெளியே வரவே அஞ்ச வேண்டிய நிலை இருந்தது. இதனால் பல ஏரிகளில் தண்ணீரும் குறைய தொடங்கியது. 

Tap to resize

Latest Videos

இரவு முழுவதும் கொட்டி தீர்த்த மழை

இந்தநிலையில் நேற்று மாலை முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள்  மேகமூட்டத்தோடு காணப்பட்டது. அவ்வப்போது லேசான மழை பெய்தது. நேற்று இரவு லேசாக பெய்ய தொடங்கிய மழை இரவு முழுவதும் கொட்டித்தீர்த்தது. இடி மின்னலுடன் பெய்த மழையால் சென்னையில் குழுமையான வானிலை நிலவுகிறது. மேலும் ஒரு சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். இந்த நிலையில் மழை தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது. 

இதையும் படியுங்கள்

Weather Update : கனமழை அலெர்ட்.. அடுத்த 6 நாட்களுக்கு தமிழகத்தில் மழை - வானிலை மையம் எச்சரிக்கை !!
 

click me!