
இன்று தூத்துக்குடியில் நடந்த நமது என் மண் என் மக்கள் பாதயாத்திரையின் போது திரு. பொன் மாரியப்பன் அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. கடந்த அக்டோபர் 2020ல், நமது மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி, மன் கி பாத் நிகழ்வில் மாறியப்பனின் நூலக சலூன் குறித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
திரு. பொன் மாரியப்பன் அவர்கள், தனது வாடிக்கையாளர்களிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் தனது சலூனில் ஒரு நூலகத்தை இணைத்துள்ளார். முடி வெட்ட அவரது சலூனில் காத்திருக்கும் நேரத்தில் அங்குள்ள புத்தகங்களை படிப்பவர்களுக்கு 30 ரூபாய் தள்ளுபடி கூட அவர் வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழக பாஜக சார்பாக அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில், அவரது நூலகத்தில் சேர்க்கும் வகையில் 100 புத்தகங்களை அண்ணாமலை வழங்கினார். மேலும் அவரது சலூனுக்கு புதிய ஹைடெக் நாற்காலியை வாங்க ரூபாய் 20,000 வழங்கப்பட்டது.
அதே போல இன்று காலை தூத்துக்குடி வந்த அவர், தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்திற்கு சென்றிருந்தார், அது குறித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை அவர் போட்டிருந்தார், அதில் "இன்று என் மண் என் மக்கள் பயணத்தின் போது, மிகவும் பிரசித்தி பெற்ற, பல நூற்றாண்டுகள் பழமையான, போர்ச்சுகீசியர் காலத்தில் கட்டப்பட்ட தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்திற்குச் சென்று வழிபட்டோம்.
ஒவ்வொரு ஆண்டும் சாதி, மத பாகுபாடு இன்றி அனைவரும் கொண்டாடும் பனிமய மாதா ஆலயத் திருவிழா, கடந்த வாரம் விமரிசையாக நடைபெற்றது என்பதை அறிந்தும், ஆலயத்தின் தங்கத் தேரை தரிசித்தும் மகிழ்ச்சி அடைந்தோம்.
உலக மக்கள் அனைவரும் எப்போதும் அமைதியுடனும், சமாதானத்துடனும் மகிழ்ந்திருக்க பிரார்த்தித்துக் கொண்டோம்" என்று எழுதியிருந்தார்.
தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு - எப்படி அப்ளை செய்வது?