புத்தாண்டு தினத்தன்று காவல் அதிகாரிகள் உயர் அதிகாரிகளை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிக்க தலைமை அலுவலகங்களுக்கு புறப்படும் வழக்கத்தைத் தவிர்க்க வேண்டும். வாழ்த்துக்களை தொலைபேசியில் தெரிவித்தால் போதுமானது என டிஜிபி சைலேந்திர பாபு திடீர் உத்தரவிட்டுள்ளார்.
ஆங்கில புத்தாண்டு வாழ்த்து
ஆங்கிலப்புத்தாண்டு பிறந்துள்ளதையடுத்து ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் அரசியல் கட்சி தொண்டர்கள் தங்கள் தலைவர்களையும், ரசிகர்கள் தங்களது ஹீரோக்களையும்,அரசு அதிகாரிகள் தங்கள் உயரதிகாரிகளையும் சந்தித்து வாழ்த்து சொல்வது வாடிக்கையான ஒன்று அந்த வகையில் காவல்துறையில் பணியாற்றும் அதிகாரிகளும் தங்கள் மேல் அதிகாரிகளை சந்திக்க காவல் தலைமை அலுவலகங்களுக்கு செல்வார்கள் இந்த நிலையில் காவல் துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திர பாபு திடீர் என உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில்,
தலைமை அலுவலகங்களுக்கு செல்லாதீர்கள்
காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். புத்தாண்டு தினத்தன்று காவல் அதிகாரிகள் உயர் அதிகாரிகளை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிக்க தலைமை அலுவலகங்களுக்கு புறப்படும் வழக்கத்தைத் தவிர்க்க வேண்டும். வாழ்த்துக்களை தொலைபேசியில் தெரிவித்தால் போதுமானது என கூறியுள்ளார். புத்தாண்டு தினத்தன்று காவல் நிலையங்களிலும் மற்றும் அவரவர் அலுவலகங்களிலும் இருந்து, அன்றாட பணிகளை மேற்கொள்ளுதல் அவசியமானது.
புத்தாண்டு விடுப்பு
அதோடு காவலர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடும் வகையில் அவர்களுக்கு சுழற்சி முறையில் வழங்கப்பட வேண்டிய வாராந்திர விடுப்பு (Weekly off), புத்தாண்டு தினத்தன்று கட்டாயம் வழங்கவும் அறிவுறுத்தப்படுகிறது என காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்