பிறந்தது 2023 புத்தாண்டு... மக்கள் கோலகல கொண்டாட்டம்... கோயில்கள், தேவாலயங்களில் மக்கள் சிறப்பு வழிபாடு!!

By Narendran SFirst Published Jan 1, 2023, 12:27 AM IST
Highlights

2023 புத்தாண்டு பிறந்ததை அடுத்து மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 

2023 புத்தாண்டு பிறந்ததை அடுத்து மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சென்னையில் புத்தாண்டையொட்டி கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று இந்த ஆண்டு சிறந்த ஆண்டாக அமைய வேண்டும் என தரிசித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: திமுக ஆட்சி அமைந்து 18 மாசம் ஆச்சு.. எந்த திட்டமும் மக்களுக்கு செல்லவில்லை - ஆர்.பி உதயகுமார் பேச்சு

மேலும் வீடுகள், நட்சத்திர விடுதிகளில் உள்ள மக்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், உறவினர்களுடன் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதுஒருபுறம் இருக்க மறுபுறம் பாதுகாப்புக்காக ஒரு லட்சம் போலீசார் குவிக்கப்பட்டதால், புத்தாண்டு கொண்டாட்டம் அமைதியாக நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,000 தருவது எப்போது? நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்!!

குறிப்பாக சென்னையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்த நிலையில் இந்த ஆண்டு புத்தாண்டை மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடி வருகின்றனர். விடுதிகளில் ஆட்டம், பாட்டம் என களைக்கட்டி வருகிறது. மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆண்டுகளுக்கு பிறகு புத்தாண்டு கொண்டாட அனுமதி வழங்கப்பட்டதால், லட்சக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் குவிந்தனர். 

click me!