புதிய தலைமை தகவல் ஆணையர் இறையன்பு.? மு.க.ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனை- தேதி அறிவித்த தமிழக அரசு

By Ajmal Khan  |  First Published Feb 23, 2023, 9:54 AM IST

தமிழக தலைமை தகவல் ஆணையராக இருந்த ஆர்.ராஜகோபால் பதவிகாலம் முடிவடைந்த நிலையில், புதிய தலைமை தகவல் ஆணையராக தற்போதைய தலைமைசெயலாளராக இருக்கும் இறையன்பு நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


தலைமை தகவல் ஆணையர் யார்.?

தலைமை தகவல் ஆணையர் பதவி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவியாகும். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் பணிகள், டெண்டர்கள், நிதி ஒதுக்கீடு, திட்டங்களுக்கான செலவு, திட்டங்களின் நிலை, அரசின் நிலைப்பாடு போன்றவற்றை விண்ணப்பித்து தெரிந்து கொள்ள முடியும், பொதுமக்களால் கேட்கப்படும் விவரங்களை தலைமை தகவல் ஆணையர் தலைமையிலான குழு தான் இறுதி செய்து விவரங்களை தரும். எனவே அந்த பதவி இடத்தில் ஏற்கனவே தலைமை ஆணையராக முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் செயலாளராக இருந்த ராஜகோபால் நியமிக்கப்பட்டிருந்தார். அவரது பதவி காலம் முடிவடைந்ததையடுத்து புதிய ஆணையராக நியமிக்க தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது.

Tap to resize

Latest Videos

ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு கண்டனம்... போராட்டத்தை அறிவித்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!!


முதலமைச்சர் ஆலோசனை

தகவல் ஆணையர் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்து. அதன் அடிப்படையில் தற்போதைய தலைமைச்செயலாளர் இறையன்பு தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். இந்தநிலையில் தகவல் ஆணையர்கள் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதிவாய்ந்த நபர்களின் பட்டியலை, அதனை தயார் செய்ய அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி அக்பர் அலி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார். இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 3 ஆம் தேதி தகவல் ஆணையரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் நடைபெறவுள்ளது.  அரசமைப்பு சட்டம் சார்ந்த பதவிகள் என்பதால் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

ஆளுநர் ஒப்புதல்

தமிழக தலைமை  தகவல் ஆணையராக இறையன்பு தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட பெயர்கள் ஆளுநரின் ஒப்புதலை பெற்ற பின்னர் அரசிதழில் வெளியிடப்படவுள்ளது.

இதையும் படியுங்கள்

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு எதிராக தமிழக அரசு அதிரடி நடவடிக்கை..! பாராட்டு தெரிவித்த கே.பாலகிருஷ்ணன்

click me!