சாலை விபத்தில் பலியான காவலரின் குடும்பத்தினருக்கு சக காவலர்கள் 24 லட்ச ரூபாய் நிதி திரட்டி நன்கொடையாக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலர் விஜயகுமார் கடந்த 31. 12. 22 ஆம் தேதி அன்று அரவக்குறிச்சி அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இந்த நிலையில் அரவக்குறிச்சியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில், 2009ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து தமிழ்நாடு முழுவதும் பணிபுரிந்து வரும் ஆண் காவலர்கள் மற்றும் பெண் காவலர்கள் சார்பாக விஜயகுமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
இதையும் படிங்க..அதெல்லாம் பழசு, இது ஈரோடு பார்முலா..! கமல் ஹாசன் கால்ஷீட் எவ்வளவு.? பங்கமாக கலாய்த்த செல்லூர் ராஜு
24 லட்சத்து 30 ஆயிரத்து 943 ரூபாயை நிதி திரட்டி நன்கொடை வழங்கிய நிகழ்ச்சி சக காவலர்கள் மற்றும் கரூர் வட்டார பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கு மேற்பட்ட ஆண் மற்றும் பெண் காவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க..ச்சீ.. மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை.. உடந்தையாக இருந்த அண்ணன் - கண்ணீருடன் புகார் கொடுத்த மகள்