பண மோசடி புகாரில் கரூர் அதிமுக பிரமுகர் அன்புநாதன் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினரால் இன்று கைது செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டம், அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் அன்புநாதனுக்கும் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரைச் சேர்ந்த பிரகாஷ் என்ற நபருக்கும் கடந்த பல ஆண்டுகளாக பண பரிமாற்றம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. பிரகாஷ் கடந்த 2018ம் ஆண்டில் அன்புநாதனுக்கு ரூ.1 கோடி கொடுத்ததாக கூறப்படுகிறது.
பைப் கம்பெனி நடத்தி வரும் அதிமுக பிரமுகர் அன்புநாதன், தனது நிறுவனத்தில் பங்குதாரராக இணைத்துக் கொள்வதாக கூறி, பிரகாஷிடம் கடந்த 2020ஆம் ஆண்டு ரூ.2 கோடி வாங்கியதாக கூறப்படுகிறது.
undefined
பணத்தைப் பெற்றுக் கொண்ட அன்புநாதன் பல நாட்களாகியும், அவரது நிறுவனத்தில் பங்குதாரராக இணைத்துக் கொள்ளாத காரணத்தால், பிரகாஷ் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு, கடந்த 15 நாட்களுக்கு முன்பு அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அன்புநாதன் வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்க முடியாது என்று பிரகாஷை மிரட்டியதாக கூறப்படுகிறது.
திருப்பூரில் காவல்துறையினருக்கு போக்கு காட்டி தப்பி ஓடிய குற்றவாளி மீண்டும் கைது
இது தொடர்பாக கரூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் பிரகாஷ் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் அதிமுக பிரமுகர் அன்புநாதனை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து விநோத வழிபாடு