நாமக்கல்லில் வனத்துறைக்கு தொடர்ந்து போக்கு காட்டும் புலி; ஆட்டை கடித்து மீண்டும் அச்சுறுத்தல்

By Velmurugan s  |  First Published Feb 18, 2023, 9:49 AM IST

நாமக்கல் மாவட்டத்தில் போக்கு காட்டி வந்த புலி, தற்போது கரூரில்  ஆட்டை கடித்துள்ளது, வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின் பெயரில் வனத்துறை அதிகாரிகள் புலி வந்துள்ளதா என தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.


கரூர் மாவட்ட எல்லையான க.பரமத்தி அருகே உள்ள அத்திப்பாளையம் பகுதியில் நேற்று விவசாய நிலத்தில் ஆடு ஒன்றை மர்ம விலங்கு கடித்துள்ளது. இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு கொடுத்த தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மாவட்ட வனச்சரகர் உத்தரவின் பேரில் வனத்துறை அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவ துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டு அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

மேலும் குப்பம், அத்திப்பாளையம், முன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு சிறுத்தை புலி வந்திருக்குமோ என்ற அச்சத்தில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Latest Videos

undefined

“முந்திரி தோப்பில்” நகைக்காக நடு இரவில் நடந்த பகீர் கொலை.. அதிர வைக்கும் பின்னணி !!

குறிப்பாக நாமக்கல் மாவட்டம் பகுதியில் பல நாட்களாக போக்கு காட்டி வந்த சிறுத்தைபுலி தற்போது காவிரி ஆற்றின் வழியாக கரூர் மாவட்ட எல்லையான அத்திப்பாளையம் பகுதிக்கு வந்ததா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிறுத்தை புலி வந்திருக்குமோ என்ற அச்சத்தில் கரூர் மாவட்ட மக்கள் மற்றும் அப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

அம்மா லிஃப்ட் கொடுக்கிற சொல்லிட்டு.. காட்டுப்பகுதியில் வைத்து என்னை நாசம் பண்ணிட்டான்.. கதறிய சிறுமி.!

click me!