கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிக்கு வழங்கப்பட்ட உணவில் இரும்புத் துண்டு இருந்ததால் நோயாளிகள் அச்சமடைந்தனர். இந்நிலையில் இது தொடர்பான வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
கரூர், காந்திகிராமம் பகுதியில் இயங்கி வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் உள்நோயாளிகளாக 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் 7 மாடிகளில் பல்வேறு பிரிவுகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தினந்தோறும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக மருத்துவக் கல்லூரிக்கு வந்து செல்கின்றனர்.
உள்நோயாளிகள் பிரிவில் தங்கி சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளுக்கு காலை, மதியம் இரவு என மூன்று வேளைகளிலும் மருத்துவக் கல்லூரி சார்பில் இலவசமாக சத்தான உணவு, பழங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
கோவையில் இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஓட ஓட வெட்டி கொலை
இந்த நிலையில் சமீபத்தில் அரசு மருத்துவக் கல்லூரியில் மூன்றாவது மாடியில் உள்ள பெண்கள் சிகிச்சைப் பிரிவில், வழங்கப்பட்ட மதிய உணவில் இரும்பு துண்டு (Iron Bold) ஒன்று கிடந்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ சம்பந்தப்பட்ட நோயாளியின் உறவினர் ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.