கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் விவசாய கிணற்றில் தவறி விழுந்த ஆட்டை மீட்பதற்காக நீரில் குதித்த இளைஞரும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அடுத்த கோவக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் ராஜா. ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், இவர் அப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். பயன்படுத்தப்படாத விவசாய பாழங்கிணற்றின் அருகில் மேய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்று தவறி கிணற்றில் விழுந்தது.
வேலூரில் 2 நாட்கள் அரசு திட்டங்கள் குறித்து முதல்வர் ஆய்வு
undefined
இதனைத் தொடர்ந்து கிணற்றில் விழுந்த ஆட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட ராஜா தவறுதலாக அவரும் கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கினார். ராஜா கிணற்றில் விழுந்ததை அறிந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இது தொடர்பாக முசிறி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்த நிலையில் ராஜாவின் உடலை மீட்டனர்.
கண்ணுக்கு எட்டிய தூரம் எதிரிகளே இல்லை; திருமாவளவன் பெருமிதம்
இது தொடர்பாக தகவல் அறிந்த மாயனூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆட்டு குட்டியை காப்பாற்ற முயன்று இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.