ஆதாரை இணைப்பதால் இலவச மின்சார திட்டம் ரத்தாகுமா? விளக்கம் அளித்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி!!

By Narendran S  |  First Published Jan 22, 2023, 7:06 PM IST

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதால் இலவச மின் திட்டங்கள் ரத்து ஆகாது என்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 


மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதால் இலவச மின் திட்டங்கள் ரத்து ஆகாது என்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். முன்னதாக மானியம் பெறும் மின் இணைப்புகளை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. இதை அடுத்து மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே மக்களுக்கு மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதால் இலவச மின் திட்டங்கள் ரத்தாகும் என்ற பயம் எழுந்தது.

இதையும் படிங்க: நாளை முதல் திடையிடப்பட உள்ள பழனி மூலவர் சன்னதி… கோவிலில் குவிந்த பக்தர்கள்!!

Latest Videos

அரசு தரப்பிலிருந்து பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்டாலும் இந்த விவகாரத்தில் மக்கள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது. இந்த நிலையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதால் இலவச மின் திட்டங்கள் ரத்து ஆகாது என்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை 2 கோடிக்கு மேற்பட்ட மின் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைத்துள்ளனர்.

இதையும் படிங்க: திமுகவிற்கு இனி நாள் தோறும் அமாவாசை தான்… முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிரடி!!

இந்த முகாம் இந்த மாதம் கடைசி வரை நடைபெறுகிறது. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதால் இலவச மின் திட்டங்கள் ரத்தாகும் என்ற பயம் தேவையில்லை. விவசாயிகள், விசைத்தறி, கைத்தறி நெசவாளர்களின் குடிசைகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் மற்றும் மின்சார துறையை மேம்படுத்துவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்தாண்டு ரூ.9,048 கோடி மானியம் வழங்கினார். இந்தாண்டு கூடுதலாக ரூ.4,000 கோடி மானியத்தை வழங்கியுள்ளார். இதனால் இந்த திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.  

click me!