கரூர் மாவட்டத்தில் மல்யுத்த பயிற்சி மைதானம் அமைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதிக்கு கோரிக்கை மாவட்ட விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் மல்யுத்த பயிற்சி பெறும் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் உள்ளனர். கரூர் மாவட்டத்தில் மல்யுத்த பயிற்சி பெற்ற இளைஞர்கள் பலர் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்றுள்ளனர். பலர் சிறப்பிடம் பெற்று ஒதுக்கீடு அடிப்படையில் அரசு துறையில் பணியில் சேர்ந்துள்ளனர்.
மல்யுத்த பயிற்சி பெறுவதற்கு போதிய வசதிகளும், மைதானமும் இல்லாததால், இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, கரூர் மாவட்டத்தில் மல்யுத்த பயிற்சி அளிக்க மைதானம் அமைத்து தரக்கோரி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
மாநில அளவிலான கபடி போட்டி; வீரர்களுடன் கபடி விளையாடி மகிழ்ந்த நடிகர் கிங்காங்
மேலும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி கரூர் மாவட்டத்தில் மல்யுத்த மைதானம் அமைக்க உதவி புரிய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
உயரம் மட்டும் தான் சிறுசு; எங்களுக்கு தைரியம் ரொம்ப பெருசு: ஆட்சியரிடம் மனு அளித்த 3 வயது சிறுமி