துபாய் நாட்டில் தீவிபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
துபாய் கட்டிடத்தில் தீ விபத்து
ஐக்கிய அரபு அமீரகத்தின் அல்-ரஸ் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த 16 பேர் உயிரிழந்தனர். இதில் 4 பேர் இந்தியர்களும் பலியானர்கள் இதில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு பேர் பலியான சம்பவம் அதிர்ச்சி அடையவைத்தது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், துபாய் நாட்டில் டேரா என்ற இடத்தில் தங்கி பணிபுரிந்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், ராமராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த திரு .இமாம் காசீம், த/பெ.அப்துல் காதர் (வயது 43) மற்றும் அதேபகுதியைச் சேர்ந்த திரு.குடு (எ) முகமது ரபிக், த/பெ.சலியாகுண்டு (வயது 49) ஆகிய இருவரும் 15.4.2023 அன்று அவர்கள் தங்கியிருந்த குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
அதிமுகவின் ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிடாதது ஏன்..? அவர்கள் என்ன புனிதர்களா..? சீமான் கேள்வி
முதலமைச்சர் இரங்கல்
உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் தமிழ்நாட்டிற்கு கொண்டுவருவதற்கு இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு செஞ்சி கே.எஸ். மஸ்தான் அவர்களை இப்பணியில் துரித நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
தமிழகத்தில் புதிதாக 2 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி; கல்லூரிகளின் எண்ணிக்கை 74ஆக உயர்கிறது