தமிழகத்தில் புதிதாக 2 மருத்துவக்கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கி தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ள நிலையில், தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 74ஆக உயர்கிறது.
தமிழகத்தில் தற்போது 72 மருத்துவ கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில், புதிதாக 2 தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஈரோட்டில் உள்ள நந்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 150 இடங்களுடன் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையை தொடங்க ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் பிச்சாண்டி பாளையம் பகுதியில் அமைந்துள்ள கல்லூரி அரசு ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான இடங்களை மாநிலத் தேர்வுக் குழுவுடன் பகிர்ந்து கொள்கிறது. அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் வரும் 150 இடங்களுக்கும் நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷாக்கிங் நியூஸ்.. கபடி விளையாடிய சிறுவன்.. திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு
அதே போன்று தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் 2021ம் ஆண்டில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கான அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ அறிவியல் மற்றும் மருத்துவமனையில் 150 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை கேகே நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவ கல்லூரிக்கு இடங்களை உயர்த்தியும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் கல்வியாண்டில் தமிழகத்தில் கூடுதலாக 350 மாணவர்களுக்கு இடம் கிடைக்கும். இதன் மூலம் மொத்தம் மருத்துவ மாணவர்களுக்கான எண்ணிக்கை 11 ஆயிரத்து 575ஆக உயர்ந்துள்ளது.