பொதுமக்களுக்கு கிடுக்குப்பிடி போட்ட மாநகராட்சி..! குப்பைகளை தரம் பிரித்து வழங்கவில்லை என்றால் அபராதம்..!

Published : Jun 14, 2022, 12:48 PM IST
பொதுமக்களுக்கு கிடுக்குப்பிடி போட்ட மாநகராட்சி..! குப்பைகளை தரம் பிரித்து வழங்கவில்லை என்றால் அபராதம்..!

சுருக்கம்

 குப்பைகளை தனித்தனியாக தரம் பிரித்து வழங்கவில்லையென்றால் ரூபாய் 100 முதல் 5ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

குப்பைகளை தரம் பிரிக்க வேண்டும்

சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் குப்பைகளை தரம்பிரித்து கொடுக்காவிடில் 100 முதல் 10,000 ரூபாய் வரை அபராதம் சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை மாநகரை தூய்மையாக வைத்துக் கொள்ளும் வகையில் பொதுமக்கள் தங்கள் வீட்டில் உருவாகும் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை ( Wet Waste / Biodegradable Waste and Dry Waste / Non - Biodegradabie Waste ) என வகைப் பிரித்து அவற்றை தினசரி வீடு தோறும் வரும் மாநகராட்சி தூய்மை பணியாளரிடம் ஒப்படைக்கும்படி சென்னை பெருநகர மாநகராட்சி அறிவித்துள்ளது  தீங்கு விளைவிக்ககூடிய வீட்டின் அபாயகரமான குப்பையை ( Domestic Hazardous Waste )வாரம் ஒருமுறை தனியாக வழங்குமாறும் தெரிவித்துள்ளது இவ்வாறு பொது மக்களால் பிரித்து கொடுக்கப்படும் மக்கும் குப்பையை பதப்படுத்தி , அதிலிருந்து இயற்கை உரம் ( Organic Manure )மற்றும் இயற்கை எரிவாயு ( Bio - CNG )தயாரிக்கப்படுகிறது .  மேலும் மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்யவும் மற்றும் பதப்படுத்தவும் ( Processing ) அனுப்பப்படுகிறது . 

இரண்டு மடங்கு அபராதம்

இதன் மூலம் சென்னையின் மிகப் பெரிய குப்பை கிடங்குகளான கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லும் குப்பையின் அளவு பெருமளவு குறைக்கப்பட்டு , சுற்றுப்புறத் தூய்மை மேம்படும் வகையில் சென்னை பெருநகர மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மக்கும் , மக்காத மற்றும் அபாயகரமான வீட்டு உபயோக குப்பைகள் முதலியவற்றை தனித்தனியாக பிரித்து வழங்காதவர்கள் மீது பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019 ன் படி தனிநபர் இல்லங்களுக்கு ரூபாய் 100,   அடுக்கு மாடி குடியிருப்பு அல்லது குழு குடியிருப்புகளுக்கு ரூபாய் 1000 ம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகமான அளவு குப்பைகளை உருவாக்குபவருக்கு ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த விதிகளை மீறினால் இரண்டு மடங்காக அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

Bharat Gaurav Train ticket price ; விமான பயணத்திற்கு இணையாக தனியார் ரயில் பயண கட்டணம்.! அதிர்ச்சியில் பயணிகள்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகத்தில் இருந்து சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு லாரி லாரியாக சென்ற பிஸ்கெட்! மாஸ் காட்டும் அறநிலையத்துறை!
மன்னார்குடியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! அலறி துடித்த பயணிகளின் நிலை என்ன?