இனி அதிக அட்வான்ஸ் வாங்கினால் ஆப்புதான்! 32 மாவட்டத்திற்கு வந்துவிட்டது வாடகை நீதிமன்றம்!

By manimegalai aFirst Published May 5, 2019, 1:22 PM IST
Highlights

வாடகைதாரர் மற்றும் வீட்டின் உரிமையாளருக்கு ஏற்படும் பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக, தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 32 மாவட்டங்களில், புதிய வாடகை நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
 

வாடகைதாரர் மற்றும் வீட்டின் உரிமையாளருக்கு ஏற்படும் பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக, தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 32 மாவட்டங்களில், புதிய வாடகை நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

படிப்பிற்கு ஏற்ற வேலை வேண்டும் என்றும், வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ளவும், கிராமங்களில் வசிக்கும் பலர், சென்னை போன்ற நகரங்களை தேடி வந்து விட்டனர். சொந்த வீடு என்பது உடனடியாக அவர்களால் கட்டி குடியேற முடியாததால், அவர்களின் முதல் தேர்வு வாடகை வீடாகவே இருக்கிறது. சில சமயங்களில் வீட்டின் உரிமையாளருக்கும், வாடகை இருப்போருக்கும் இடையே பிரச்சனைகள் வந்து, அந்த பிரச்சனை நீதி மன்றம் வரை செல்கிறது. 

இதனை தவிர்க்கும் பொருட்டு வாடகை நீதி மன்றங்கள் உருவாக்க புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

ஏற்கனவே அதிக வாடகை வீடுகள் மற்றும் வீடுகள் கட்டி விற்கும் வணிக நிறுவனங்கள் நடைமுறையில் இல்லாத காலத்தில் கொண்டுவரப்பட்ட வாடகை கட்டுப்பாட்டு சட்டம், தற்போதைய சூழலுக்கு ஏற்றதாக இல்லை.

இதனால் மத்திய அரசு அனைவருக்கும் வீட்டுவசதி திட்டத்தின் கீழ், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தபோது, வாடகை கட்டுப்பாட்டு சட்டத்தை நீக்க பரிந்துரைத்தது. 

அதன் படி, தமிழ்நாடு சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைப்படுத்துதல் சட்டம், சட்டப்பேரவையில், கடந்த 2017-ல் இயற்றப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. 

இந்த சட்டம் மற்றும் அதற்கான விதிகள் என்ன என்பதை தமிழக அரசு, அரசிதழில் அறிக்கை செய்துள்ளது, அதன் படி இந்த சட்டம் கடந்த பிப்ரவரி 20-ம்தேதி முதல் அமலுக்கு வந்தது. 

இந்த சட்டம் பற்றி மக்கள் தெரிந்து கொள்ள  'www.tenancy.tn.gov.in'என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வீட்டின் உரிமையாளர் மட்டும் வாடகைக்கு செல்வோர் பற்றிய தகவல்களை பதிவு செய்ய முடியும். வீட்டின் உரிமையாளருக்கும் வாடகை பதிவு எண் வழங்கப்படும்.

குறிப்பாக இந்த சட்டத்தின் கீழ், வீட்டின் உரிமையாளர் மூன்று மாத வாடகை தொகையை மட்டுமே, முன்பணமாக பெறமுடியும் தவறும் பட்சத்தில் அவர் மீது வாடகையாளர் நடவடிக்கையும் எடுக்க முடியும். மேலும் இருவருக்குள்ளும் வரும் பிரச்சனைகள் எளிதில் தீர்க்க வருவாய் கோட்ட அளவில், வாடகை அதிகார அமைப்பு ஏற்படுத்தி அதனை செயல்படுத்த துணை ஆட்சியர் பதவிக்கு நிராகராக அலுவலர், அரசின் முன் அனுமதி பெற்று மாவட்டஆட்சியர்களால் நியமிக்கப்படுவார் என கூறப்பட்டுள்ளது.

வாடகை மற்றும் ஒப்பந்தங்கள் தொடர்பான வழக்குகளுக்கு தீர்வு காண்பதற்காக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 32 மாவட்டங்களிலும் வாடகை நீதிமன்றங்களை உருவாக்க தமிழக வீட்டு வசதி மற்றும்நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசாணை பிறப்பித்துள்ளது. 

இதன்படி, சென்னை மாவட்டத்துக்கு, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சிறிய வழக்குகளை விசாரணை செய்ய 10 மற்றும் அதற்கு மேல் சில வாடகை நீதி மன்றாலும், மற்ற மாவட்டங்களில் 30 திற்கும் மேற்பட்ட வாடகை நீதிமன்றங்களும் அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுட்டள்ளது.

click me!