என்னுடைய பெயரிலேயே பல சுயேட்சைகள்.. கங்கணம் கட்டி தோற்கடிச்சுட்டாங்க.. தர்மத்தை மறக்காத ஓபிஎஸ்!

By vinoth kumar  |  First Published Jun 5, 2024, 7:41 AM IST

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் 1.66 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி வீழ்த்தினார். 


என்னுடைய சுயேட்சை சின்னமான பலாப்பழம் சின்னத்தை கண்டறிந்து வாக்குகளை அளித்த இராமநாதபுரம் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு ஓபிஎஸ் நன்றி தெரிவித்துள்ளார்.  

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் 1.66 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி வீழ்த்தினார். திமுக கூட்டணியின் ஐயுஎம்எல் வேட்பாளர் நவாஸ்கனி - 5,09,664 வாக்குகளும், ஓ.பன்னீர்செல்வம் 3,42,882 வாக்குகளும், அதிமுக ஜெயபெருமாள்  99,780 வாக்குகள் பெற்றுள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்தை தவிர எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனர். இந்நிலையில், என்னுடைய சுயேட்சை சின்னமான பலாப்பழம் சின்னத்தை கண்டறிந்து வாக்குகளை அளித்த இராமநாதபுரம் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு ஓபிஎஸ் நன்றி தெரிவித்துள்ளார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: Sowmiya Anbumani: இறுதி நிமிடம் வரை நீடித்த திரில்; நூலிழையில் வெற்றியை தவறவிட்ட சௌமியா அன்புமணி

இதுதொடர்பாக முன்னாள் முதல்வரும், ராமாதபுரம் தொகுதி வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம்  வெளியிட்டுள்ள அறிக்கையில்: இந்தியத் திருநாட்டின் மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின்கீழ், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக நான் போட்டியிட்ட நிலையில், என்னுடைய பெயரிலேயே பல சுயேட்சைகளை நிறுத்தி என்னை எப்படியாவது வீழ்த்த வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டு சிலர் பணியாற்றிய நிலையில், என்னுடைய சுயேட்சை சின்னமாம் 'பலாப்பழம்' சின்னத்தை கண்டறிந்து இலட்சக்கணக்கான வாக்குகளை அளித்துள்ள இராமநாதபுரம் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் தேர்தலில் எனக்காக தேர்தல் பணியாற்றிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தொண்டர்களுக்கும், கழக நிர்வாகிகளுக்கும், பாரதிய ஜனதா கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி, மூவேந்தர் முன்னணிக் கழகம், தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக், பசும்பொன் தேசியக் கழகம், தென்னாடு மக்கள் கட்சி, தமிழர் தேசம் கட்சி / வீர முத்திரையர் சங்கம், இந்திய மக்கள் கல்வி இயக்கம் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், இராமநாதபுரம் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதையும் படிங்க: திருவள்ளூர் தொகுதியில் வரலாற்றுச் சாதனை வெற்றி படைத்த காங்கிரஸ் வேட்பாளர்! யார் இந்த சசிகாந்த் செந்தில்?

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள். பேரறிஞர் அண்ணா அவர்களின் பொன்மொழிக்கேற்ப, மக்களின் தீர்ப்பிற்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு தலை வணங்குகிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் உடன் பிறப்புகள் தோல்வியை கண்டு துவண்டுவிடாமல், எப்போதும் போல் கழகப் பணியை மேற்கொள்ள வேண்டுமென்றும், மக்கள் தொண்டு ஆற்ற வேண்டும் என்றும், அம்மா அவர்களின் வழியிலான ஆட்சியினை தமிழ்நாட்டில் அமைக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டுமென்றும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 

click me!