Chief Minister MK Stalin : முதல்வர் ஸ்டாலின் அவர்கள், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று மரியாதையை செலுத்தினார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு என்னும் பணிகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி தற்பொழுது வரை நடைபெற்று வருகிறது. இந்திய அளவில் 543 தொகுதிகளில் நடந்த தேர்தலில் என்டிஏ கூட்டணி 294 இடங்களை பிடித்து விரைவில் மத்தியில் ஆட்சி அமைக்க உள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலை ஒப்பிடும் பொழுது காங்கிரஸ் கட்சி தனது இந்தியா கூட்டணியோடு இணைந்து சுமார் 231 இடங்களை பெற்றுள்ளது என்றாலும், ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையை இந்தியா கூட்டணி பெறவில்லை என்றே கூறலாம். இந்த சூழலில் இன்னும் ஒரு சில தொகுதிகளில் மட்டுமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
undefined
அதே நேரம் தமிழகம் மற்றும் புதுவையில் திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் அதன் தோழமை கட்சிகள் 40க்கு 40 என்ற இடங்களில் வெற்றி பெற்று மாபெரும் வெற்றியை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பல்வேறு பிரபலங்களும் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் இந்தியா கூட்டணி பெற்ற வெற்றியை கொண்டாடும் வகையில், இன்று மறைந்த முன்னாள் முதல்வர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களுடைய நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
எங்கும் நிறைந்திருந்து எங்களை என்றும் வழிநடத்தும் உயிரினும் மேலான தலைவர் கலைஞர் அவர்களே....
நீங்கள் அமைத்த பாதையில் நடைபோடும் அரசின் ஆட்சிக்குப் பாராட்டாய் கூட்டணிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியினை வழங்கியுள்ளனர் தமிழ்நாட்டு மக்கள்!
இந்த வெற்றியும்… pic.twitter.com/QsIu76YlNB
அது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் "எங்கும் நிறைந்திருக்கும் எங்களை என்றும் வழிநடத்தும் உயிரினும் மேலான தலைவர் கலைஞர் அவர்களே நீங்கள் அமைத்த பாதையில் நடைபோடும் திராவிட மாடல் அரசின் ஆட்சிக்கு பாராட்டாய் "இந்தியா" கூட்டணிக்கு வரலாறு சிறப்புமிக்க வெற்றியினை வழங்கி உள்ளனர் தமிழ்நாட்டு மக்கள். இந்த வெற்றியும், இனி பெற உள்ள வெற்றிகளும் நீங்கள் விதைத்த கொள்கைகளாலும், எண்ணங்களாலும் விளைந்தவை இந்த வெற்றியை நவீன தமிழ்நாட்டின் சிற்பியான உங்களுக்கு காணிக்கையாக்குகிறேன்" என்று கூறியுள்ளார்.