Coimbatore : நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கோவை தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றிபெற்றுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் தொடங்கியது. முதல் கட்டமாக தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதிகளில் வாக்குப்பதிவு நடந்த நிலையில், தொடர்ச்சியாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூன் ஒன்றாம் தேதி இந்தியா முழுவதும் சுமார் 543 தொகுதிகளில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், அதற்கு அடுத்த நாள் வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றியை பெரும் என்று அறிவித்திருந்தது.
undefined
Sowmiya Anbumani: இறுதி நிமிடம் வரை நீடித்த திரில்; நூலிழையில் வெற்றியை தவறவிட்ட சௌமியா அன்புமணி
ஆனால் கணித்ததை விட குறைந்த அளவிலான இடங்களை மட்டுமே பாஜக வென்று இருந்தாலும், மூன்றாவது முறையாக பிரதமர் மோடி விரைவில் வெற்றிவாகை சூடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் மற்றும் புதுச்சேரியில் 40க்கு 40 என்று விகிதத்தில் மிகப்பெரிய வெற்றியை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெற உள்ளது.
மேலும் கோவை தொகுதியில் சுமார் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 808 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்றிருக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் அண்ணாமலை அவர்களுக்கு சுமார் 4,49,628 வாக்குகளும், அதிமுகவிற்கு இரண்டு லட்சத்து 36 ஆயிரத்து 192 வாக்குகளும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் மற்றும் புதுவையை பொறுத்தவரை அனைத்து இடங்களிலும் திமுக மற்றும் அதன் தோழமை காட்சிகள் மட்டுமே வெற்றிபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தனது வாழ்த்துக்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும் தோழமை கட்சிகளுக்கும் தெரிவித்துள்ளார்.