அதிமுகவில் சேருவதற்கு பதில் கிணத்துல விழுந்து சாகலாம்…. தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி!

By manimegalai aFirst Published Sep 15, 2018, 10:40 AM IST
Highlights

அதிமுகவில் இணைவதற்கு பதில் மொட்டை கிணற்றில் விழுந்து சாகலாம் என அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், செய்தியாளர்களிடம் கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது.

அதிமுகவில் இணைவதற்கு பதில் மொட்டை கிணற்றில் விழுந்து சாகலாம் என அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், செய்தியாளர்களிடம் கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது.

திருப்பரங்குன்றம், திருவாரூர், இடைத்தேர்தலில் அமமுக வெற்றி பெற்றால் அதிமுக கட்சியையும், சின்னத்தையும் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். பொறுப்பாளர்களும் விலகி கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில் அமமுக தோற்றால் அனைவரும் அதிமுகவில் இணைந்து விடுகிறோம் என அதிமுக நிர்வாகிகளுக்கு சவால் விட்டேன்.

இதை கேட்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ, குழம்பிவிட்டார். நான் அதிமுகவில் இணைய தூது விடுவதாக வதந்தியை கிளப்புகிறார்.

அதிமுக ஒரு மொட்டை கிணறு. மொட்டைக்கிணறு என தெரிந்தே அதில் விழுந்தால் இறந்து விடுவோம். அதிமுகவில் இணைவதற்கு பதிலாக மொட்டை கிணற்றில் விழுந்து சாகலாம்.

அதிமுகவில் யாருக்கும் தலைமை பண்பு என்பது கிடையாது. அதனாலேயே கட்சியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தலைவர்கள் பேச்சை யாரும் கேட்பது இல்லை. அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் தங்கள் இஷ்டத்துக்கு உளறுகிறார்கள்.

ஆந்திராவில் பெட்ரோல்- டீசல் விலையில் ரூ.2 குறைத்தது போல் தமிழகத்திலும் குறைக்க வேண்டும். மத்திய அரசிடம் வலியுறுத்தி விலை ஏற்றத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை செய்ய தமிழக அரசுக்கு துணிச்சல் கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

click me!