
தூத்துக்குடியில் தலித், இஸ்லாமியர் உரிமைகள் மற்றும் தமிழர் நலன் காக்க மறுக்கும் மத்திய, மாநில அரசைக் கண்டித்தும தமிழ்ப் புலிகள் கட்சியினர் கயத்தாறில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தலித், இஸ்லாமியர் உரிமைகள் மற்றும் தமிழர் நலன் காக்க மறுக்கும் மத்திய, மாநில அரசைக் கண்டித்தும், கயத்தாறு இந்திரா நகரில் மகளிர் சுகாதார வளாகம், வாருகால் வசதி, மயான கொட்டகை செய்துதர வேண்டும், வடக்கு இலந்தைகுளத்தில் தனி நபர் கழிப்பிடம், மயான கொட்டகை கட்டித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கயத்தாறு பிரதான சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தமிழ்ப் புலிகள் கட்சியின் மாவட்டச் செயலர் தாசு தலைமை தாங்கினார். கோவில்பட்டி நகரச் செயலர் தமிழரசு, மாவட்ட துணைச் செயலர் வீரபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட துணைச் செயலர்கள் பீமாராவ், கத்தார் பாலு, தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினர்.
கட்சியின் பொதுச்செயலர் பேரறிவாளன், தலைமை நிலையச் செயலர் முகிலரசன், கயத்தாறு ஒன்றிய பொறுப்பாளர் பாண்டியராசு உள்பட பலர் கலந்துகொண்டனர்.