5 கோடி புத்தங்கள் தயார்.. இதுவரை 3.35 கோடி புத்தங்கள் அனுப்பி வைப்பு.. பள்ளிக் கல்வித்துறை தகவல்..

By Thanalakshmi VFirst Published May 26, 2022, 4:05 PM IST
Highlights

வரும் கல்வியாண்டில் மாணவர்களுக்கு வருவதற்காக 5.19 கோடி பாடப் புத்தகங்கள் தயார் நிலையில் இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 12 ஆம் வரையிலான மாணவர்களுக்கு 3.35 கோடி புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

வரும் கல்வியாண்டில் மாணவர்களுக்கு வருவதற்காக 5.19 கோடி பாடப் புத்தகங்கள் தயார் நிலையில் இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 12 ஆம் வரையிலான மாணவர்களுக்கு 3.35 கோடி புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கோடைவிடுமுறைக்கு பிறகு  ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கபடும் என்று நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார். அதே போல் 11 ஆம் வகுப்பிற்கு ஜூன் 27 ஆம் தேதியும் 12 ஆம் வகுப்பிற்கு ஜூன் 20 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. மேலும் கொரொனா கால அட்டவணை போல் அல்லாமல் வழக்கம் போல் பள்ளிகள் அனைத்தும் செயல்படும் என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: அடுத்த ஆண்டிற்கான 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் வெளியீடு.. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..

இதனிடையே மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, வரும் 2022- 23 கல்வியாண்டில் 10 வகுப்பிற்கு ஏப்ரல் 3 ஆம் தேதியும் 11 ஆம் வகுப்பிற்கு மார்ச் 14 ஆம் தேதியும் 12 ஆம் வகுப்பிற்கு மார்ச் 13 ஆம் தேதியும் பொதுத்தேர்வுகள் நடைபெறவுள்ளன. அதுபோல, ஒன்றாம்‌ வகுப்பு முதல்‌ ஒன்பதாம்‌ வகுப்புகளுக்கு வரும்‌ ஏப்ரல்‌ 20 முதல்‌ 26ஆம்‌ தேதி வரை இறுதித்‌ தேர்வு நடைபெறுகிறது.

அதோடுமட்டுமல்லாமல் வரும் 2022- 23 ஆம் ஆண்டிற்கான அரையாண்டு, காலாண்டு தேர்வு குறித்து தேதிகளும் வெளியிடப்பட்டுள்ளன. 2022 ஆம்‌ ஆண்டு செப்டம்பர்‌ மாதம்‌ 23ஆம்‌ தேதி பிளஸ்‌ 1 மற்றும்‌ பிளஸ்‌ 2 மாணவர்களுக்கு காலாண்டு தேர்வும் 1 முதல்‌ 10ஆம்‌ வகுப்பு வரை செப்டம்பர்‌ 26 ஆம்‌ தேதி காலாண்டு தேர்வும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர்‌ 30 தேதியுடன்‌ காலாண்டு தேர்வு முடிவடையும்‌ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுபோல, 2022 ஆம்‌ ஆண்டு டிசம்பர்‌ 16ஆம்‌ தேதி பிளஸ்‌ 1 மற்றும்‌ பிளஸ்‌ 2 மாணவர்களுக்கு அரையாண்டு
தேர்வும் டிசம்பர்‌ 19ஆம்‌ தேதி 1 முதல்‌ 10ம்‌ வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டுத்‌ தேர்வும் நடைபெறும் என்றும்  2023 ஆம்‌ ஆண்டு ஜனவரி 2ஆம்‌ தேதி விடுமுறை முடிந்த மீண்டும்‌ பள்ளிகள்‌ திறக்கப்படும்‌ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் வரும் கல்வியாண்டில் மாணவர்களுக்கு வருவதற்காக 5.19 கோடி பாடப் புத்தகங்கள் தயார் நிலையில் இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 12 ஆம் வரையிலான மாணவர்களுக்கு 3.35 கோடி புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: 1 - 12 ஆம் வகுப்பு அரையாண்டு, காலாண்டு தேர்வுகள் எப்போது..? விடுமுறைகள் எத்தனை நாட்கள்..? அறிவிப்பு வெளியானது

click me!