ரூ.4000 கோடியில் 10,000 கி.மீ சாலைகள் சீரமைக்கப்படும்... முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

By Raghupati RFirst Published Jan 19, 2023, 4:36 PM IST
Highlights

தற்போது நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், முதல்வரின் கிராமசாலைகள் மேம்பட்டு திட்டத்தை அறிமுகப்படுத்துகிறேன். முதல் கட்டமாக இரண்டு ஆண்டுகளில் 10 ஆயிரம் கிலோமீட்டர் சாலைகள் ரூபாய் 4000 கோடியில் சீரமைக்கப்படும் என்று கூறியிருந்தார்.

தற்போது நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், முதல்வரின் கிராமசாலைகள் மேம்பட்டு திட்டத்தை அறிமுகப்படுத்துகிறேன். முதல் கட்டமாக இரண்டு ஆண்டுகளில் 10 ஆயிரம் கிலோமீட்டர் சாலைகள் ரூபாய் 4000 கோடியில் சீரமைக்கப்படும் என்று கூறியிருந்தார். 

நெடுஞ்சாலை துறை

1954ம் ஆண்டு நெடுஞ்சாலை துறை ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்கி இந்தியாவிலேயே மாநில அளவிலான முதல் நெடுஞ்சாலை ஆராய்ச்சி  நிலையம் என்ற பெருமையை பெற்றுள்ளது தமிழ்நாடு. இதுதான் இந்தியாவிற்கே முன் மாதிரியான ஆராய்ச்சி நிலையம். கிராமங்கள் நகரங்களோடு இணைக்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்த அன்றைய முதலமைச்சர் கலைஞர் 1972ஆம் ஆண்டிலேயே கிராமப்புறங்களில் சாலைகளை உருவாக்கிட தனியாக ஒரு அலகினை நெடுஞ்சாலத்துறையில் தோற்றுவித்து கிராமப்புற மேம்பாட்டிற்கு வித்திட்டார். 

இதையும் படிங்க: முதலமைச்சரின் தனிச்செயலாளர்களுக்கு கூடுதல் துறை ஒதுக்கீடு- தமிழக அரசு உத்தரவு

திமுக அரசு சாதனை

1972ம் ஆண்டு 1,500க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட கிராமங்களுக்கு இணைப்பு சாலை அமைக்கக்கூடிய திட்டம் திமுக அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. 1990ம் ஆண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட அனைத்து கிராமத்திற்கும் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு 517 கிராமங்கள் இணைப்பு சாலை வசதிகளை பெற்றன. இணைப்பு சாலை வசதி இல்லாத ஆயிரம் பேருக்கு மேல் மக்கள் தொகை கொண்ட கிராமங்களே தமிழகத்தில் இல்லை என்ற சாதனையும் படைக்கப்பட்டது. 

சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்பது தான் அது. அதனால்தான் சாலை விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை தமிழ்நாடு அரசே ஏற்கக்கூடிய வகையில் இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தில் சாலை பாதுகாப்பை மேம்படுத்த 556 இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: காலாண்டர் வாங்கியவரை பொய்யாக கட்சியில் இணைத்த பாஜக; மதிமுக பிரமுகர் குமுறல்

முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டம்

இதுகுறித்து பேசிய ஒன்றிய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, தமிழ்நாட்டில் சாலை பாதுகாப்பு திட்டம் மிகவும் சிறப்பாக செயல்பட்டதால் விபத்துகள் குறைந்திருக்கிறது என்று பேசியுள்ளார்.  அடுத்த முக்கியமான திட்டம் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டம்.  இந்த திட்டத்தில் மாவட்ட தலைமையிடங்கள் மற்றும் தாலுகா தலைமையிடங்களை இணைக்கக்கூடிய 2,200 கி.மீ நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசலின் அடிப்படையில் அடுத்த 10 ஆண்டுகளில் 4 வழிச்சாலைகளாகவும், 6,700 கி.மீ நீளமுள்ள சாலைகள் இரண்டு வழித்தட சாலைகளாகவும் மேம்படுத்தப்பட உள்ளன.

முதலமைச்சர் ஸ்டாலின்

நெடுஞ்சாலை துறை சாலையில் உள்ள 1,781 தரைப்பாலங்கள் உயர்மட்ட பாலங்களாக ரூ.2,401 கோடியில் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 648 தரைப்பாலங்களை உயர்மட்ட பாலங்களாக ரூ.610 கோடியில் கட்ட எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. 2ம் கட்டமாக இந்த ஆண்டில் 435 தரைபாலங்கள் உயர்மட்ட பாலங்களாக ரூ.1,105 கோடியில் கட்டப்பட உள்ளன. 2026 ஆம் ஆண்டிற்குள் தரைப்பாலங்களே இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உருவாக உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!