காலாண்டர் வாங்கியவரை பொய்யாக கட்சியில் இணைத்த பாஜக; மதிமுக பிரமுகர் குமுறல்

By Velmurugan s  |  First Published Jan 19, 2023, 3:10 PM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பாஜக மாவட்டத் தலைவருடன் அருகில் அமர்ந்து டீ குடித்த நபர் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டதாக வெளியான புரளிக்கு மதிமுக பிரமுகர் மறுப்பு தெரிவித்துள்ளார்.


சாத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மூன்றாவது வார்டு உறுப்பினராக ம.தி.மு.க வை  சேர்ந்த சூடிக்கொடுத்தால் மோகன் என்பவர் இருந்து வருகிறார். இவர் சாத்தூர் டிப்போ அருகே டீ மற்றும் ஹோட்டல் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு டீ அருந்துவதற்காக பாஜக மாவட்ட தலைவர் சுரேஷ் குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் அங்கு வந்துள்ளனர். கட்சி நிர்வாகிகள் மாவட்டத் தலைவரிடம் சூடிக்கொடுத்தால் மோகன் ம.தி.மு.க ஒன்றிய குழு மூன்றாவது வார்டு உறுப்பினராக செயல்பட்டு வருகிறார் என்று அறிமுகப் படுத்தியுள்ளனர்.

யாருக்கும் சிரமம் தராமல் பொங்கல் முடிந்தவுடன் எனது தாய் காலமாகியுள்ளார் வடிவேலு உருக்கம்

Tap to resize

Latest Videos

undefined

உடனடியாக மாவட்ட தலைவர் அவருக்கு சால்வை அணிவித்து பாஜக கட்சி காலண்டரை வழங்கியுள்ளார். அதை பெற்றுக் கொண்டு பின்பு அவர்களிடம் ஒன்றாக அமர்ந்து டீ அருந்தியுள்ளார். அதனை போட்டோ எடுத்த நிர்வாகிகள் மதிமுகவை சேர்ந்த ஒன்றிய குழு உறுப்பினர் பாஜகவில் மாவட்டத் தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் இணைந்ததாக பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர்.

சாலையோரம் இடம் பிடிப்பதில் போட்டி; மத்திய அரசு ஊழியர் கல்லால் அடித்துக் கொலை

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மூன்றாவது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் சூடிக்கொடுத்தால் செய்தியாளர்களை சந்தித்து மறுப்பு தெரிவித்துள்ளார்: அதில் நான் பாஜகவில் இணையவில்லை. அவர்கள் யார் என்று எனக்குத் தெரியாது. டீ குடிப்பதற்காக வந்தவர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்ததால் அவர்களுடன் அமர்ந்து டி அருந்தினேன். ஒரு காலண்டர் வாங்கியதற்கு என்னை கட்சியில் இணைத்ததாக தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். மேலும் தான் ஒருபோதும் மாற்று கட்சிக்கு செல்ல மாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.

click me!