
ஆங்கில புத்தாண்டு நாளின் நள்ளிரவில் கோவில்களில் நடைதிறந்து வைக்க அரசு அனுமதிக்கக் கூடாது என்று பாஜக., தேசியச் செயலர் எச்.ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக ஆங்கிலப் புத்தாண்டு நள்ளிரவில் ஆலயங்களைத் திறப்பது ஆகம விரோதம் என இதற்கு எதிர்ப்பு பரவலாகக் கிளம்பியது. ஆனால், இதற்கு ஆதரவாகவும் சிலர் குரல் எழுப்பினர்.
இதனிடையே, ஆங்கிலப் புத்தாண்டில் நள்ளிரவில் கோவில் நடை திறப்பதற்கு தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இருப்பினும், நடை மூடலுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்நிலையில் பாஜக., தேசியச் செயலர் எச்.ராஜா புத்தாண்டு தினத்தில் கோவில் நடைதிறக்க அனுமதிக்க கூடாது என்று அரசுக்குக் கோரிக்கை விடுத்து டிவிட்டர் பதிவிட்டுள்ளார். அவரது டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
ஜனவரி-1 ஆங்கில புத்தாண்டு என்றால் இளைஞர்கள் மது அருந்து வீதிகளில் கலாட்டா செய்வது சகஜமாகி உள்ளது.
எனவே காவல்துறை இரவு 1 மணிக்கு மேல் யாரும் கொண்டாடக்கூடாது என்று அறிவித்துள்ளது. அதேபோல் நள்ளிரவில் கோவில்களை திறந்து வைத்திருப்பதும் ஆகம விதி மீறலாகும். எனவே தமிழக அரசு நள்ளிரவில் கோவில்களை நடை திறப்பதற்கு தடை விதிக்க வேண்டும். - என்று கூறியுள்ளார்.