புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு விதிக்கப்பட்ட 7 நிபந்தனைகள் என்னென்ன?

Asianet News Tamil  
Published : Dec 30, 2017, 11:43 AM ISTUpdated : Sep 19, 2018, 01:45 AM IST
புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு விதிக்கப்பட்ட 7 நிபந்தனைகள் என்னென்ன?

சுருக்கம்

2018 celebrations various restrictions apply

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு நட்சத்திர விடுதி, கேளிக்கைகளுக்கு போலீஸ் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெரிவித்திருப்பதாவது:  #பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு விண்ணப்பித்து சிறப்பு உரிமம் பெற கட்டாயம் பெறவேண்டும்.

நள்ளிரவு 1 மணியுடன் மது பான விருந்து அளிப்பதை கொள்ள வேண்டும். அளவுக்கு மீறி குடிபோதையில் ஈடுபடுவர்களை விடுதி நிர்வாகம் பத்திரமாக அனுப்பி வைக்க வேண்டும். அப்படி முடியவில்லைஎன்றால், அவர்கள் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்க வேண்டும்.

#விடுதிக்கு வரும் வாகனங்கள் கேளிக்கை நிகழ்ச்சிகள் CCTV கேமரா மூலம் பதிவு செய்யவேண்டும். 

#விடுதி நீச்சல் குளங்களை டிச31-ம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையில் மூடப்பட வேண்டும்.

# நீச்சல் குளத்தில் உள்ள தண்ணீரை முழுமையாக வெளியேற்றிவிட்டு, நீச்சல் குளத்தை மூடி வைக்க வேண்டும். அதேபோல, நீச்சல் குளத்தின் மீதோ, அனுமதிபெறாத இடங்களின் மீதோ மேடை அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

#மது அருந்தியவர்களை அந்தந்த விடுதிகளே அவர்களின் வீடுகளில் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.

#விடுதிக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி விதித்துள்ள மேலே உள்ள கட்டுப்பாடுகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விடுதி நிர்வாகிகளுக்கு காவல்துறை கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

PREV
click me!

Recommended Stories

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு.. அரசு தேர்வுத் துறைக்கு ஆசிரியர்கள் வைத்த முக்கிய கோரிக்கை!
மார்ச் 4 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. அட! அடுத்த மாதம் இத்தனை நாட்கள் லீவா? மாணவர்கள் குஷி!