தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்பநிலை இயல்பைவிட அதிகரிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கோடைகாலம் தொடங்கி விட்ட நிலையில் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் முதியவர்கள், குழந்தைகள் திணறி வருகின்றனர். இன்னும் வரும் நாட்களில் அதாவது ஏப்ரல் மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். ஆனால் இப்போது வெயில் சுட்டெரித்து வருவதால் பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதியில் வறண்ட வானிலையே நிலவியது. எந்த இடத்திலும் மழை பதிவாகவில்லை. சேலம் மற்றும் ஈரோட்டில் அதிகபட்சமாக 39.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது” என்று தெரிவித்துள்ளது.
பாஜகவில் இணைந்த புதுக்கோட்டை சமஸ்தானத்தின் இளவரசி.. வரவேற்ற அண்ணாமலை..!
மேலும் “ இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது அசௌகிரியம் ஏற்படலாம். ” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் இணைந்த அகில இந்திய ஃபார்வர்டு பிளாக்; பாஜகவுடன் சரத்குமார் கூட்டணி!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வான மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-34 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.