பாஜகவில் இணைந்த புதுக்கோட்டை சமஸ்தானத்தின் இளவரசி.. வரவேற்ற அண்ணாமலை..!

By Raghupati R  |  First Published Mar 6, 2024, 4:06 PM IST

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் இளவரசியான ராஜகுமாரி ராதா நிரஞ்சனி ராஜாயி பாஜகவில் இணைந்ததற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்றுள்ளார்.


புதுக்கோட்டை சமஸ்தானத்தின் இளவரசியும், தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் வீராங்கனையும், சிறந்த சமூக சேவகியுமான, சகோதரி, ராஜகுமாரி ராதா நிரஞ்சனி ராஜாயி அவர்கள், நமது பாரதப் பிரதமர் மோடி, அவர்கள் நல்லாட்சியாலும், ஆளுமைத் திறனாலும் ஈர்க்கப்பட்டு, அவரது கரங்களை வலுப்படுத்த, நேற்றைய தினம் பாஜக மூத்த தலைவர்கள் முன்னிலையில் தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டுள்ளார்கள். அவரை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

Tap to resize

Latest Videos

undefined

புதுக்கோட்டை சமஸ்தான மகாராஜா ராஜகோபால தொண்டைமான் அவர்கள், 1948 ஆம் ஆண்டு, சுதந்திர இந்தியாவுடன், புதுக்கோட்டை சமஸ்தானத்தை எந்த நிபந்தனையும் இல்லாமல் இணைத்து, சமஸ்தானத்திற்குச் சொந்தமான 48 லட்சம் ரூபாய் நிதியையும், மொத்த சொத்துக்களையும், நமது நாட்டிற்கே வழங்கியவர். புதுக்கோட்டை, தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டபோது, தங்கள் குடும்பத்துக்குச் சொந்தமான 100 ஏக்கர் நிலத்தை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க வழங்கியவர்.

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் இளவரசியும், தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் வீராங்கனையும், சிறந்த சமூக சேவகியுமான, சகோதரி, ராஜகுமாரி ராதா நிரஞ்சனி ராஜாயி அவர்கள், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு அவர்கள் நல்லாட்சியாலும், ஆளுமைத் திறனாலும் ஈர்க்கப்பட்டு, அவரது… pic.twitter.com/2CdyUu16mX

— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k)

நாட்டுக்காக, மக்கள் நலனுக்காகவே வாழ்ந்த பெரும் பாரம்பரியம் மிக்க ராஜகுடும்பத்தில் இருந்து, சமூகத்திற்காகவும், பொதுமக்களுக்காகவும் உழைப்பதற்கு முன்வந்திருக்கும் சகோதரி ராதா நிரஞ்சனி தொண்டைமான் அவர்களின் வருகை, பாஜகவுக்கு நிச்சயம் வலு சேர்க்கும் என்பது உறுதி” என்று பதிவிட்டுள்ளார் அண்ணாமலை.

மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் முதல் நடிகர் சுரேஷ் கோபி வரை.. பாஜகவின் முக்கிய வேட்பாளர்கள் யார் யார்?

click me!