கலைஞர் கூட பேசிட்டேன்.. கையெடுத்து கும்பிட்ட வடிவேலு.. இது சமாதி அல்ல, சன்னதி - நடிகர் வடிவேலு உருக்கம்

By Raghupati RFirst Published Mar 3, 2024, 11:08 PM IST
Highlights

நடிகர் வடிவேல் இன்று கருணாநிதி அருங்காட்சியகத்தை பார்வையிட்டு ரசித்தார். அதன்பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நினைவு மண்டபம் மெரினா கடற்கரையில் பல கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த நினைவு மண்டபம் திறந்து வைக்கப்பட்ட நிலையில், ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இந்த நிலையில் இன்று சென்னைக்கு வந்த நடிகர் வைகைப்புயல் வடிவேலு கருணாநிதி நினைவிடத்துக்கு சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இது சமாதி இல்லை சன்னதி என்றும் திமுகவினருக்கு இதுதான் குலதெய்வ கோயில். கருணாநிதி ஐயா அருகிலேயே அமர்ந்து பேசுவது போன்ற வீடியோ அமைப்புகள் வேறலெவலில் மெய் சிலிர்க்க வைத்து விட்டது.

மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் முதல் நடிகர் சுரேஷ் கோபி வரை.. பாஜகவின் முக்கிய வேட்பாளர்கள் யார் யார்?

அனைவரும் வந்து பாருங்கள், இலவசம்தான். இந்த இடத்துக்கு வந்தது என் பாக்கியமாக கருதுகிறேன். திமுக எனும் பிரம்மாண்ட கோட்டையை கட்டியுள்ளார் கருணாநிதி. அவருக்கு இப்படியொரு இடத்தை கட்டியமைத்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று வடிவேலு பேசினார்.

பிறகு பெரம்பூரில் நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற நடிகர் வடிவேலு, “எம்.ஜி.ஆர்-ன் தீவிர ரசிகன் நான், ஆனால் கலைஞரின் தீவிர பக்தன், தீவிர விசுவாசி.  மகனை ஸ்கூலுக்கு அனுப்புற மாதிரி ஜெயிலுக்கு அனுப்பிருக்காரு கலைஞர்” என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலினை புகழ்ந்து பேசினார்.

BJP candidate list 2024: பாஜக வேட்பாளர்கள் பட்டியல்; 195 பேர் பட்டியலில் தமிழக வேட்பாளர்கள் இடம்பெறவில்லை!!

click me!