சென்னையில் திடீரென முடங்கிய ஏர்டெல் மொபைல் நெட்வொர்க்!

By SG BalanFirst Published Mar 3, 2024, 8:06 AM IST
Highlights

சென்னையின் பல பகுதிகளில் ஏர்டெல் நெட்வொர்க் முடங்கியதால் வாடிக்கையாளர்கள் பலர் போன் கால் செய்யவோ இன்டர்நெட் பயன்படுத்தவோ முடியாமல் அவதிப்பட்டனர். இணைய சேவை முடங்கியதால், ஏர்டெல் நெட்வொர்க் பயன்படுத்தப்படும் தொழில்களிலும் சில மணிநேரங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது.

பார்தி ஏர்டெல் இந்தியா முழுவதும் தொலைத்தொடர்பு சேவை வழங்கும் முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டு உள்பட நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் ஏர்டெல் மொபைல் நம்பரை பயன்படுத்தி வருகின்றனர். ரிலையன்ஸ் ஜியோவுக்கு அடுத்து அதிக வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் நெட்வொர்க்காகவும் ஏர்டெல் உள்ளது.

இந்நிலையில் நேற்று (சனிக்கிழமை) இரவு சென்னையில் திடீரென்று ஏர்டெல் மொபைல் நெட்வொர்க் முடங்கியது. பல இடங்களில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் சிக்னல் கிடைக்காமல் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் திண்டாடினர்.

சென்னையின் பல பகுதிகளில் ஏர்டெல் நெட்வொர்க் முடங்கியதால் வாடிக்கையாளர்கள் பலர் போன் கால் செய்ய முடியாத நிலை காணப்பட்டது. வரும் அழைப்புகளை பேச முடியாத நிலையில், வாடிக்கையாளர்கள் தவிப்புக்கு உள்ளானார்கள்.

கெத்து காட்டும் பஜாஜ்! லேட்டஸ்டு அப்பேட்களுடன் பல்சர் NS125 பைக் மீண்டும் அறிமுகம்!

இதேபோல இன்டர்நெட் பயன்படுத்த முடியாமலும் மக்கள் அவதிப்பட்டனர். இணைய சேவை முடங்கியதால், ஏர்டெல் நெட்வொர்க் பயன்படுத்தப்படும் தொழில்களிலும் சில மணிநேரங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது.

சுமார் இரண்டு மணிநேரம் கழித்து படிப்படியாக அனைத்து இடங்களிலும் மீண்டும் ஏர்டெல் நெட்வொர்க் பயன்பாட்டுக்கு வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நெட்வொர்க் பாதிப்பு தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்டது தானா அல்லது வேறு காரணம் இருக்குமா என்று தெரியவில்லை.

ஏர்டெல் நிறுவனத்தின் தரப்பில் சென்னையில் ஏற்பட்ட திடீர் நெட்வொர்க் முடக்கம் பற்றி எந்த விளக்கமும் இதுவரை வெளியாகவில்லை.

100 கி.மீ. ரேஞ்ச் கொடுக்கும் ஹீரோ எலெக்ட்ரிக் பைக்! 30 ஆயிரம் கம்மியா கிடைக்குது!

click me!