TET Exam: அலர்ட்..! ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு.. முழு விவரம்..

By Thanalakshmi VFirst Published Mar 9, 2022, 1:24 PM IST
Highlights

TRB Exams: ஆசிரியர் தகுதி தேர்வுக்கு வரும் 14 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
 

TRB Exams: ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) சமீபத்தில் 2022-ம் ஆண்டுக்கான அட்டவணையை வெளியிட்டது. அதில் ஆசிரியர் தகுதி தேர்வு ஏப்ரல் மாதம் 2-வது வாரத்தில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது வெளியிட்டு இருக்கிறது.அந்த வகையில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் வருகிற 14-ந் தேதி திங்கட்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பிக்க கடைசி தேதி அடுத்த மாதம் ஏப்ரல் 13-ந் தேதி என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வை பொறுத்தவரையில் தாள்-1, தாள்-2 என்ற அடிப்படையில் நடைபெற உள்ளது. மேலும் இதற்கான விண்ணத்தினை www.trb.tn.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் தேர்வு எப்போது என்றும் தேர்வு நேரம் குறித்தான அறிவிப்புகள் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு http://www.trb.tn.nic.in/ என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஆசிரியர் தேர்வு வாரியம் 2022-ம்ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை வெளியிடபட்டது. அதன்படி, இந்த ஆண்டு 9,494 ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், உதவி பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்படி, இந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 9,494 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதே போல், இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளில் 4,989 காலி இடங்களை நிரப்புவதற்காக மே மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஜூன் 2-வது வாரத்தில் போட்டித் தேர்வு நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தில் 167 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக மே மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஜூன் 2-வது வாரத்தில் தேர்வு நடத்தப்பட உள்ளது. அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 493 விரிவுரையாளர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு ஆகஸ்ட்டில் வெளியிடப்பட்டு, நவம்பர் 2-வது வாரத்தில் அதற்கான போட்டித் தேர்வு நடத்தப்பட உள்ளது என்று தேர்வு கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: குட் நியூஸ் ! 10, 11, 12 பொதுத்தேர்வு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!

click me!