Gold Loan waiver: மீண்டும் ஒரு தணிக்கை.. உத்தரவு போட்ட கூட்டுறவு துறை.. தள்ளிப்போகும் நகைக்கடன் தள்ளுபடி..

Published : Mar 09, 2022, 10:25 AM IST
Gold Loan waiver: மீண்டும் ஒரு தணிக்கை.. உத்தரவு போட்ட கூட்டுறவு துறை.. தள்ளிப்போகும் நகைக்கடன் தள்ளுபடி..

சுருக்கம்

Gold Loan waiver: கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியான பயனாளிகளின் விவரம் உள்ளிட்டவை குறித்த பட்டியலை மீண்டும் தணிக்கை செய்து, வரும் மார்ச் 17 ஆம் தேதிக்குள் முடித்து அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று கூட்டுறவு துறை தணிக்கை இயக்குனர் தெரிவித்துள்ளார்.  

மேலும் படிக்க: Temple Aggression Recovery: கோவில் நிலங்கள் அளவீடு.. அதிரடி நடவடிக்கைகளை எடுக்கும் இந்துசமய அறநிலையத்துறை..

தமிழகம் முழுவதும் கூட்டுறவு  வங்கிகளில் 5 சவரன் வரை நகை கடன் அனைத்தும் வட்டியுடன் தள்ளுபடி செய்யப்படும் என்று ஆட்சி அரியணை ஏறியவுடன் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி,  பல்வேறு வழிக்காட்டுதல் அடிப்படையில் நகைகடன் தள்ளுபடி செய்வதற்கு தகுதி வாய்ந்தவர்களின் பட்டியல் தயார்செய்யப்பட்டது. மேலும் தகுதியான 13 லட்சம் பயனாளிகளுக்கு கூட்டுறவு வங்கியில் நகைகடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்தார்.

மேலும் படிக்க: Temple Aggression Recovery: கோவில் நிலங்கள் அளவீடு.. அதிரடி நடவடிக்கைகளை எடுக்கும் இந்துசமய அறநிலையத்துறை..

இந்நிலையில் தற்போது, அரசு நிர்ணயித்த தகுதி அடிப்படையில் பயனாளிகளின் நகைக்கடனை தள்ளுபடி செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது நடந்து வருகின்றன. மேலும் பல்வேறு கூட்டுறவு வங்கிகளில் போலி மற்றும் நகையே இல்லாமல் வங்கிக் கடன் பெற்றிருப்பது கண்டறியப்பட்டு, அவற்றின் மீதான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இவற்றின் அடிப்படையில் நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியான 13 லட்சம் பயனாளிகள் பட்டியலை கூட்டுறவுத் துறை தயாரித்து, அவற்றின் மீது சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், சிறப்பு தணிக்கை மீது, தற்போது மீண்டும் தணிக்கை நடத்த கூட்டுறவு தணிக்கை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பொது நகை கடன் தள்ளுபடி தொடர்பாக சிறப்பு தணிக்கை முடிக்கப்பட்ட வங்கி மற்றும் சங்கங்களில், மண்டல அளவில் கூடுதல் இயக்குநர், இணை, துணை இயக்குநர்கள், சரக கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குநர்கள், அந்தந்த மண்டலங்கள், சரகங்களில் சோதனை தணிக்கையை தனித்தனியாக மேற்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க: குட் நியூஸ் ! 10, 11, 12 பொதுத்தேர்வு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!

முதல்கட்டமாக, நகர கூட்டுறவு வங்கி மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளிலும் 2-ம் கட்டமாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் இதர சங்கங்களில் மேற்கொள்ள வேண்டும். ஒரு அலுவலர் சோதனை மேற்கொண்ட கூட்டுறவு நிறுவனத்தை மீண்டும் பிற அலுவலர் சரிபார்க்கக் கூடாது. இந்த சோதனையை வரும் மார்ச் 17-ம் தேதிக்குள் முடித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஷாக்கிங் நியூஸ்! விஜய் பரப்புரை கூட்டத்துக்கு கைத்துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!
Govt Business Training: நீங்களும் ஆகலாம் தொழிலதிபர்.! சென்னையில் 5 நாள் பயிற்சி.! A to Z கத்துக்கலாம் வாங்க.!