
பல்வேறு கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் நிலங்களில் கடைகள் கட்டியும் வாடகைக்கு விடப்பட்டிருக்கிறது. இப்படி வாடகைக்கு விடப்பட்டிருக்கும் கோயில் சொத்துக்கள் மூலம் வர வேண்டிய வாடகை பாக்கியும் சுமார் 2,390 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கிறது என்று தெரியவந்துள்ளது. எனவே உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, மேற்கண்ட வாடகை பாக்கியை வசூலிக்கவும் இந்து சமய அறநிலையத்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
ஒரு வருடத்திற்கு 540 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, நாளொன்றுக்கு 2 முதல் 3 கோடி ரூபாய் வரை வசூலிக்கப்பட்டு வருகிறது என்றும் ஆக்கிரமிப்பு அகற்றம் மற்றும் வாடகை வசூலில் காவல்துறை மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ஷாக் நியூஸ் ! இனி ஞாயிற்றுக்கிழமையிலும் பள்ளி.. தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு !
இந்நிலையில் கடந்த மாதம் தமிழ்நாட்டில் ஆக்கிரமிக்கப்பட்ட கோயில்களுக்கு சொந்தமான ரூ.2000 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டது.அதுக்குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இதுவரை 991 அக்கிரமிப்பாளர்களிடமிருந்து ஆக்கிரமிக்கப்பட்ட 540.39 ஏக்கர் நிலங்கள், 496.174 கிரவுண்ட் மனைகள், 20.143 கிரவுண்ட் கட்டடங்கள் மற்றும் 46.207 கிரவுண்ட் குளக்கரைகள் மீட்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தத.இதன் தற்போதைய மதிப்பு ரூ.2,043 கோடி என்று சொல்லப்பட்டது.
இதனிடையே தமிழகம் முழுவதும் கோவில்களுக்கு சொந்தமாக 31 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டுள்ளதாக இந்துசமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.தற்போது இதுத்தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் நிலங்களை நவீன ரோவர் கருவிகள் உதவியுடன் அளவீடு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.
மேலும் படிக்க: Anna University: மாணவர்களே அலர்ட்..அண்ணா பல்கலைகழக பாடத்திட்டம் மாற்றம்.. அமைச்சர் அறிவிப்பு..
மாவட்ட வாரியாக தூத்துக்குடியில் 3,661 ஏக்கர், திருச்சியில் 3,151 ஏக்கர், திருப்பூரில் 3,044 ஏக்கர், திருநெல்வேலியில் 2,706 ஏக்கர், சிவகங்கையில் 1,898 ஏக்கர் உட்பட இதுவரை 31,671 ஏக்கர் நிலங்கள் அளக்கப்பட்டுள்ளன.அதேபோல, அளவீடு செய்யப்பட்ட நிலங்களில் மாவட்ட வாரியாக விழுப்புரத்தில் 106,திருவண்ணாமலையில் 167, காஞ்சிபுரத்தில் 98, கோயம்புத்தூரில் 400 என பல்வேறு மாவட்டங்களில் எல்லைக்கல் நடப்பட்டு, கம்பிவேலி அமைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
எஞ்சிய நிலங்களை 150 நிலஅளவையர்கள் மூலம் 56 ரோவர்கருவிகளைக் கொண்டு அளவிடும் பணி நடந்து வருகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்க வட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதன்மூலம், கோயில் நிலங்களை கண்டறிவதுடன், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நிலங்களை பாதுகாத்து கோயிலுக்கு வருவாய் ஈட்டவும் ஏதுவாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.