
பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு :
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்ததால் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பள்ளி கல்வித்துறை மாணவர்களுக்கான மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றினை கூறியுள்ளது.
அதன்படி மார்ச் 19ஆம் தேதி சனிக்கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கு விடுமுறையை அறிவித்துள்ளது. மார்ச் 20-ஆம் தேதி சனிக்கிழமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று கட்டாய அறிவிப்பினை பள்ளிக்கல்வி ஆணையர் கூறியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை வர வேண்டும் :
அதன்படி மார்ச் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்து பள்ளிகளும் வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதாவது, மார்ச் 20ஆம் தேதி அன்றைய தினம் மேலாண்மை குழு கூட்டம் மற்றும் பெற்றோர் கூட்டம் நடைபெறும். எனவே அதற்காக அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.